27/02/2016

5030 - நீர்நிலைகளை ஆக்கிரமித்தால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது; கரூர் ஆட்சியர் ராஜேஷ் எச்சரிக்கை

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் குறைத்தீர்க்கும் கூட்டம் கமாவட்ட ஆட்சியர் இராஜேஷ், தலைமையில் நடந்தது. இதில் பேசிய விவசாயிகள் பல இடங்களில் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு நடப்பதாகவும், நீர் வழிப்பாதைகளில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் குறை கூறினார்கள்.
இதற்க்கு பதிலலித்த, அமராவதி வடிநில பாதுகாப்பு உதவி செயற்பொறியாளர்: பொதுப்பணித் துறையின் கட்டுபாட்டில் உள்ள தென்கரை வாய்க்காலில் இருந்து பிரியும் கிளை வாய்க்கால்களான குரவன் கண்ணாறு, கல்மண்டபம் வாய்க்கால், ஆண்டாள் தெரு வாய்க்கால், மாரியம்மன் கோவில் வாய்க்கால், சேடதெரு வாய்க்கால், எருக்கன் கட்டை வாய்க்கால் ஆகியவற்றின் பாசன நிலங்கள் நகர விரிவாக்கத்தின் காரணமாக வீடுகளாக மாறி விட்டன. வாய்க்கால்களின் வழியாக நகராட்சி கழிவு நீர் மட்டுமே செல்கிறது. இந்த வாய்க்கால் நகராட்சியின் வசம் உள்ளது என்றார்.
திருமாநிலையூர், செல்லாண்டிபாளையம் பாசன பகுதி விவசாயிகள்: தான்தோன்றி இராஜவாய் க்கால் திருமாநிலையூர் கழிவு வாய்க்கால் மற்றும் பாசன கால்வாயை தூர்வார வேண்டும்.
இதற்க்கு பதிலைத்த செயற்பொறியாளர்: தான்தோன்றி கிளை வாய்க்கால் மற்றும் திருமா நிலையூர் கழிவு வாய்க்காலில் பாசனம் நடைபெற்ற பகுதிகள், தற்போது குடியிருப்புகளாக மாறி விட்டதால், கடந்த பல ஆண்டுகளாக பாசனத்திற்கு தண்ணீர் செல்லாமல் வாய்க்கால் முழுவதும் அழிந்த நிலையில் உள்ளது. வாய்க்காலை மறுசீரமைக்க எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டி உள்ளது என்றார்.
இறுதியாக பேசிய மாவட்ட ஆட்சியர் இராஜேஷ்: வாய்க்கால் எல்லைகள் பொதுப்பணி துறையிடமே இருக்கும். ஆக்கிரமிப்பு என்றால் எல்லை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். அப்படி இருக்கும் போது மறுசீரமைப்பு செய்ய வேண்டிய அவசியம் என்ன...?. மாவட்டத்தில் ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் விசாரணை மேற்கொண்டு அவை உண்மையென தெரிந்தால், நிலங்களை மீட்பதோடு, ஆக்கிரமிப்பு செய்தவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தயவு தாட்சணை பார்க்க கூடாது. மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், மரம் வளர்ப்பது, சீமை கருவேலம் அகற்றுதல் ஆகிய மூன்று பணிகளும் முக்கிய குறிக்கோள்.
இதில், சீமை கருவேல மரம் அகற்றும் பணி பிப்., 23-ஆம் தேதி முதல் நடக்கிறது. இதற்காக, 20 ஜே.ஸி.பி. இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. அடுத்து, ஒரு லட்சம் மரக்கன்று நடும் பணி நடக்கிறது. இதில் விவசாயிகளும் தங்களை இணைத்துக்கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a comment