10/03/2016

5091 - குற்றவியல் விசாரணை முறைச்சட்டம், பிரிவு- 397 ன் கீழ் சீராய்வு மனு, நன்றி. Anti Corruption Foundation

கீழ்நிலை நீதிமன்றத்தில் (பெருநகர நடுவர்) நடைபெற்றவைகள் எல்லாம் சட்ட விதிகளுக்குட்பட்டதாக இல்லை என நீங்கள் கருதும் பட்சத்தில், எடுத்தவுடனே மேல்முறையீட்டுக்குதான் போக வேண்டும் என்பதில்லை...
கீழ்நிலை நீதிமன்றத்தில் நடைபெற்றவைகள் எல்லாம் சட்ட விதிகளுக்கு உட்பட்டதுதான் என்பதனை ஆய்வு செய்வதற்காக சம்மந்தப்பட்ட வழக்கின் பதிவுக்கட்டை (வழக்கு தொடர்பான ஆவணங்கள்) பெற்று, இந்த கீழ்நிலை (பெருநகர நடுவர்) நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கான காரணத்திற்கான தன்னிலை விளக்கத்தினையும் குற்றவியல் விசாரணை முறைச்சட்டம், பிரிவு- 404 ன் படி கேட்டு பெற்று ஆராய்ந்து முடிவு அறிவிக்கும் படி, உயர்நீதிமனறம் (அ) அமர்வு நீதிமன்றத்தில் குற்றவியல் விசாரணை முறைச்சட்டம், பிரிவு- 397 ன் கீழ் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம்.

1 comment:

  1. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உறுப்பு 227ன்படியும் இந்த சீராய்வு மனுவை தாக்கல் செய்யலாம்.

    ReplyDelete