Friday, February 24, 2017

5630 - நீதிமன்றத்தில் தனிப்புகார் மாதிரி மனு. நன்றி ஐயா. நல்வினை விஷ்வராஜூ, வழக்கறிஞர் அவர்கள்.

வழக்கறிஞர் இல்லாமல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் தனி புகார் வழக்கு மனுவில் இணைக்க வேண்டிய விசயங்கள்
1. புகார் மனு
2. புகார் மனுவிற்கு ஆதரவான ஆவணங்கள்
3. புகார் மனுவிற்கு முகப்பு தாள் (டாக்கெட் சீட்)
3 (அ) புகார் மனுவிற்கும் முகப்பு தாளுக்கும் இடையே இரண்டு பச்சை தாள்கள் இணைக்கப்பட வேண்டும்
4. புகார் மனுவிற்கு ஆதரவான ஆவணங்கள்
ஒவ்வொன்றுக்கும் தனிதனியே முகப்பு தாள் (டாக்கெட் சீட்)
5. புகார் மனுவிற்கு ரூ 5 நீதிமன்ற கட்டன ஒட்டு வில்லைகள் (கோர்ட்டு பீஸ் ஸ்டாம்பு) ஒட்ட வேண்டும்
6. புகார் மனுவிற்கு ஆதரவான ஆவணங்கள் ஜெராக்ஸ் ஆக இருந்தால் ஒவ்வொன்றுக்கும் ரூ 5 நீதிமன்ற கட்டன ஒட்டு வில்லைகள் (கோர்ட்டு பீஸ் ஸ்டாம்பு) ஒட்ட வேண்டும் அசலாக இருப்பின் தேவை இல்லை
7. இவற்றை மேல் முனையில் நன்கு தைக்க வேண்டும் ( தேர்வில் விடைதாள் தைப்பது போல)
இவைகளை விளக்கமாக பார்ப்போம்
2. புகார் மனுவிற்கு ஆதரவான ஆவணங்கள்: ஆவணம் என்பது இந்த பிரச்சினையில் உங்கள் பிரசினையை நிரூக்க உங்கள் வசம் உள்ள ஒவ்வொரு தாளும் (பேப்பரும்) ஆவணம்தான் எகா. காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனு உயர் அதிகாரிகளிடம் கொடுத்த புகார் மனு அஞ்சல் ரசீது அஞ்சல் ஒப்புகை அட்டை
3. புகார் மனுவிற்கு முகப்பு தாள் (டாக்கெட் சீட்) தனித் தாளாக இருக்க வேண்டும் அதன் இரண்டாம் பக்கத்தில் அச்சிடப்படாமல் இருக்க வேண்டும். அதில் நீதிபதி டைரி ஆர்டர் எழுத பயன்படுத்துவார்
மாதிரியை தனியாக விளக்கியுள்ளேன்.https://www.facebook.com/nalvinai/photos/a.1225131860833139.1073741867.136509026362100/1231117406901251/?type=3&theater
3 (அ) புகார் மனுவிற்கும் முகப்பு தாளுக்கும் இடையே இரண்டு பச்சை தாள்கள் இணைக்கப்பட வேண்டும் வழக்கு நாட்குறிப்பு எழுத நீதிபதிக்கு தேவைப்படும்
4. புகார் மனுவிற்கு ஆதரவான ஆவணங்கள் ஒவ்வொன்றுக்கும் தனிதனியே முகப்பு தாள் (டாக்கெட் சீட்) இனைத்து பின் செய்ய வேண்டும் இதன் நோக்கம் ரசீதுகள் போன்ற சிறு தாள்கள் கானமற் போகாமல் பாதுகாப்பாக இருக்க
5. புகார் மனுவிற்கு ரூ 5 நீதிமன்ற கட்டன ஒட்டு வில்லைகளாக (கோர்ட்டு பீஸ் ஸ்டாம்பு) ஒட்ட வேண்டும் புகார் மனுவிற்கு உரிய கட்டணம் ரூ 5 ஆகும் இதை நீதிமன்ற கட்டன ஒட்டு வில்லைகள் (கோர்ட்டு பீஸ் ஸ்டாம்பு) ஒட்ட வேண்டும். ரூ 5 ஸ்டாம்பு கிடைக்க வில்லையென்றால் சில்லறையாகவும் ரூ 5 மதிப்புக்கு ஒட்டலாம்
https://www.facebook.com/nalvinai/photos/a.1225131860833139.1073741867.136509026362100/1227844010561924/?type=3&theater
6. புகார் மனுவிற்கு ஆதரவான ஆவணங்கள் அசலாக இல்லாமல் ஜெராக்ஸ், சான்று நகல் ஆக இருந்தால் ஒவ்வொன்றுக்கும் ரூ 5 நீதிமன்ற கட்டன ஒட்டு வில்லைகள் (கோர்ட்டு பீஸ் ஸ்டாம்பு) ஒட்ட வேண்டும், அசலாக இருப்பின் தேவை இல்லை, நீதிமன்றத்துக்கு அசல் ஆவண்ங்களை தாக்கல் செய்யாமல் நகல் ஒப்படைப்பதற்கான கட்டணம் இது
வழக்கினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் வழி முறை தொடரும்

1 comment: