28/03/2017

5709 - தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கீழ் நியமனம் செய்யப்பட்ட தகவல் ஆணையர்கள் நீதியரசர்கள் அல்ல., நன்றி ஐயா. Leenus Leo Edwards

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கீழ் நியமனம் செய்யப்பட்ட தகவல் ஆணையர்கள் நீதியரசர்கள் அல்ல. 

அவர்களுக்கு மேற்படி சட்டத்திற்கு பொருள் விளக்கம் கொடுக்கும் அதிகாரம் இல்லை. மேற்படி சட்டத்திற்கு பொருள் விளக்கம் அளிக்க மாண்புமிகு உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதியரசர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. தகவல் ஆணையர்களின் பணியானது மேற்படி சட்டத்தினை முறையாக அமல்படுத்த வேண்டிய பணியாகும். ஆகவே அவர்கள் கொடுக்கும் ஆணைகளை முன் ஆணைகளாக காண்பித்து இந்த சட்டத்தின் உபயோகத்தை மாண்புமிகு நீதிமன்றங்களை தவிர மற்ற யவராலும் கட்டுப்படுத்தமுடியாது. 
.
இந்த கீழ்கண்ட பைலில் கொடுத்துள்ள பல விளக்கங்கள் தவறானது. அதைப்பற்றி சிறிது பார்ப்போம். 
.
1. நடவடிக்கையை பற்றி நேரடியாக கேட்கமுடியாது. ஆனால் மனு எந்த தேதியில் பெறப்பட்டது, மனுவிற்கான உருவாக்கப்பட்ட கோப்பு எண், மனுவை பரிசீலிக்கும் அலுவலர் பெயர், அதிகாரியின் பெயர், கோப்பு குறிப்பின் நகல், இதே பிரச்சனை சம்பந்தமாக பெறப்பட்ட மனுக்கள் எத்தனை, இதுவரை தீர்வு காணப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை...என்ற விபரங்களை தாரளமாக கேட்கமுடியும். கோரிய தகவல்களில் இருந்து நாம் கொடுத்த மனுவின் நிலையை மறைமுகமாக அறியமுடியும். 
.
2. ஏன் என்ற கேள்வியை மட்டுமே கேட்கமுடியாது. அதைவிட்டு ஒட்டு மொத்தமாக கேள்விகள் கேட்கமுடியாது என்று கூறுவது சரியல்ல. தஅஉ சட்டத்தில் தகவல்களை இவ்வாறுதான் கேட்கவேண்டும் என்று எங்கு எழுதப்படாத நிலையில், தஅஉ சட்டத்தில் இல்லாத ஒன்றை கூறுவது என்பது சட்டத்தை பழிப்புரைப்பதாகும். உதாரணமாக - தலைமை தகவல் ஆணையரின் பெயர் என்ன? இது கேள்விதான். அதற்காக அவர்கள் பதில் சொல்ல மறுக்க முடியுமா? எங்கு பொருண்மைகள் ஆவணங்களாக ஒரு அலுவலகத்தில் இருக்கின்றதே அது தகவல் ஆகும். அதை அவர்கள் வழங்கி ஆகவேண்டுமே தவிர அதை கோரும் முறை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறை செய்யமுடியாது. 
.
3. கருத்துகள் தாரளமாக கேட்கலாம். கோரும் கருத்துகள் பொருண்மைகளாக அந்த அலுவலக கோப்புகளில் இருக்க வேண்டும். உதாரணமாக – எத்தனை நாட்களுக்குள் ஒரு மனுவை அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். பொதஅ அதற்கான பதிலை (உம். 30 நாட்கள்) கூறவேண்டும் இங்கு அவர் கூறும் கருத்து அவரது சொந்த கருத்து அல்ல. அந்த அலுவலக நடைமுறைப்பற்றிய கருத்து ஆகும். 
.
4. கேள்விகளாக கேட்க தடை ஏதும் இல்லை (ஏன் என்ற கேள்வியை தவிர) என்ற நிலையில் கேள்விகளாக கேட்கப்பட்டவை தகவல்கள் எனும் பதத்தில் வராது என்று கூற யவருக்கும் அதிகாரம் இல்லை. கேள்விகளாக கேட்டவை அந்த அலுவலகத்தில் பொருண்மைகளாக இருந்தால் அந்த தகவலை வழங்கியே ஆகவேண்டும். 
.
5. அந்த அலுவலகத்தில் இருக்கும் அனைத்து ஆவணங்களின் நகலை பெற மனுதார்ருக்கு உரிமை உண்டும். அந்த ஆவணம் அவர் கொடுத்த மனுவாக இருந்தாலும். ஆவணத்தை கோருவது என்பது சான்றிட்ட நகலை பெறுவதற்கு சம்ம். அதற்கு சட்டப்படி மனுதார்ர் ரூ.2 பக்கத்திற்கு செலுத்த தயாராக இருக்கும்போது, மனுதார்ரின் ஆவணத்தை பெறமுடியாது என்று கூறுவது சட்டத்தை இழிப்பதாகும். 
.
6. ஒரு அரசு ஊழியர் முறையாக பணி நியமனம் பெற்றாரா என்பதை அறிய அனைத்து பொதுமக்களுக்கும் உரிமை உண்டு. இந்த தகவல் 3ம் நபர் தகவல் என்று சொல்லுவதே தவறு. அவ்வாறு பொது தகவல் அலுவலர் சொன்னால், அந்த தகவல் 8(i)(j) பிரிவில் உள்ள வரம்புரையாக சொல்லப்பட்ட தகவல் எனும் பத்த்தில் வருகின்றதா என்பதையும் அவர் முன்வந்து கூறவேண்டும். 
.
7. சரியானது.
.
8. சட்டத்தின் பிரிவு 4(1)(b) தகவல்கள் அனைத்தையும் அந்த அலுவலகம் தானகவே முன் வந்து அவர்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டிய தகவல்கள் ஆகும். அதில் அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் பெயர், வாங்கும் சம்பளம் அனைத்தும் அடங்கும். சட்டத்தில் தெளிவாக சொல்லப்பட்டதற்கு தவறான பொருள் விளக்கம் அளிக்க யவருக்கும் உரிமையில்லை. 
.
9. கோப்பு அளிக்கப்பட்டிருப்பின் எந்த தேதியில் அது அழிக்கப்பட்டிருக்கின்றது என்ற விபரத்தை மனுதார்ருக்கு வழங்கவேண்டும். 
.
10. அந்த தகவல் 8(i)(j) பிரிவில் உள்ள வரம்புரையாக சொல்லப்பட்ட தகவல் எனும் பதத்தில் வருகின்றதா என்பதையும் பொதஅ கூறவேண்டும். சட்டத்தின் பிரிவு 4(1)(b) குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் வழங்கியே ஆகவேண்டும்.

கடைசியாக– நீதியரசர்கள் மட்டுமே சட்டத்திற்கு பொருள் விளக்கம் அளிக்க முடியும். சட்டத்தில் கூறப்பட்டவைகளில் ஒரு தெளிவற்ற தன்மை இருக்கும் நிலையில் மட்டுமே பொருள் விளக்கம் அளிக்க முடியும். அதுவும் முதலில் (Litra Legis) இலக்கண மரபு குன்றாப் பொருள் விளக்கம் அளிக்க வேண்டும். பின்னர் சட்டமன்றத்தின் கருத்திற்கு இணங்க பொருள் கொள்ள வேண்டும் (Sententia Legis). சட்டத்தில் 4(1)(b) எவையெல்லாம் தானக முன் வந்து வெளியிடப்பட்டிருக்க வேண்டிய தகவல் என சட்டம் கூறியபிறகு, அதற்கு மாறாக பொருள் விளக்கம் அளிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.
.
அரசு அதிகாரிகள் தங்களுக்கு சாதகமான ஆணைகளை மக்கள் முன் வைத்து (ஆணைகள் என்பது அந்த வழக்கின் தன்மையை பொருத்தது. அதை அனைத்து வழக்குகளுக்கும் முன் ஆணையாக எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஆணைகள் வாயிலாக வழங்கப்படும் பொருள் விளக்கம் சட்டத்திற்கு எதிராக இருந்தால், அதை முன் ஆணையாக எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை), இந்த சட்டத்தினை முடக்குவதற்காக தவறான பிரசாரங்களை செய்கின்றார்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
No comments:

Post a comment