ஒரு அரசு ஊழியர் தனது பணியில் எடுத்த விடுமுறை என்பது தனிப்பட்ட நபரின் தகவல் என்று பிரிவு 8(1)(j)-யை காரணம் காண்பித்து வழங்க மறுக்கமுடியாது. அந்த பிரிவில் 'வரம்புரையாக' எழுதப்பட்ட வாக்கியங்கள் முக்கியமான ஒன்றாகும். ஒரு தகவலை 8(1)(j)-யை காரணம் காண்பித்து மறுத்தால், அந்த தகவலானது பாரளுமன்றத்திற்கும் அல்லது மாநில சட்டமன்றத்திற்கோ மறுக்கப்படவேண்டிய தகவலாக இருக்க வேண்டும். அரசிடம் சம்பளம் பெறும் ஒரு அரசு ஊழியர், அரசுப்பணியில் எடுத்த விடுமுறை விபரங்களை பாரளுமன்றத்திற்கோ அல்லது மாநில சட்டமன்றத்திற்கோ வழங்க மறுக்க முடியாத நிலையில், அந்த தகவலை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோரினாலும் மறுக்க முடியாது.
.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்களை கோரி மனு எழுதும்போது, கடைசி பத்தியாக,
.
”நான் கோரும் தகவல்கள் பாரளுமன்றமோ அல்லது மாநில சட்டமன்றமா கோரினால் மறுக்கப்படவேண்டிய தகவல்களா என்ற விபரத்தை வழங்கவும்”
.
என்று மறக்காமல் குறிப்பிடவும்.
.
மேற்படி கோரிய தகவலுக்க பொது தகவல் அலுவலர் ”மறுக்க முடியாது” என்று பதில் எழுதினால், அவர் பிரிவு 8(1)(j)-ன் படி மனுதாரருக்கு கோரிய தகவல்களை வழங்க மறுக்க முடியாது என எதிர்வாதம் புரியலாம்.
.
இது சம்பந்தமாக “கோவாவில் உள்ள மும்பை உயர்நீதிமன்றத்தின் ரிட் ஆணை“ யானது பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது. பிரிவு 8(1)(j) சம்பந்தமாக பல மாநில மற்றும் மத்திய தகவல் ஆணையத்தின் ஆணைகள்ள் இருந்தாலும், உயர்நீதிமன்றமானது மேற்படி பிரிவில் “வரம்புரையாக“ கூறப்பட்டதை கவனத்தில் எடுத்து கொண்டு, வழங்கியிருக்கும் இந்த ஆணை மிக முக்கியத்துவமானது.
No comments:
Post a Comment