26/04/2017

5790 - எதிரி ஒருவர், தனது வழக்கில், தானே தாக்கல் செய்யும் ஜாமீன் மனு, நன்றி ஐயா. Dhanesh Balamurugan

நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 
திருவைகுண்டம்

Cr. M. P. No - /2017
முகிலன்
த/பெ முருகன்                                    ......                      மனுதாரர் /எதிரி
(எதிர்)
மாநில அரசு சார்பில்
காவல் உதவி ஆய்வாளர்
திருவைகுண்டம் காவல் நிலையம்
குற்ற எண் - 20/2017                          .....                       எதிர்மனுதார்

கு. வி. மு. ச பிரிவு 436ன் கீழ் தாக்கல் செய்யப்படும் பிணை மனு
1. நான் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 341,323,ன் கீழ் குற்றம் செய்துள்ளதாக எதிர்மனுதார் என்மீது குற்றஞ்சாட்டி, என்னை கைது செய்து சமூகம் நீதிமன்றத்தில் ஒப்படைத்ததையடுத்து நீதிமன்றம் என்னை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்துள்ளது.
2. இந்த வழக்கிற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும், தொடர்புக்கு கிடையாது.
3. மேலே குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் எனக்கு எதிராக பொய்யாக புனையப்பட்டது ஆகும்.
4. நான் சட்டத்தையும், நீதியையும் மதித்து நடக்கும் ஓர் இந்திய குடிமகன் ஆவேன்.
5. என்னை சமூகம் நீதிமன்றம் பிணையில் விட்டால் நான் எங்கும் தப்பிச் சென்று விட மாட்டேன்.
6. எனக்கு சொந்தமாக வீடும், நிரந்தர முகவரியும் உள்ளது.
ஆகையால் சமூகம் நீதிமன்றத்தார் அவர்கள் கருணை கூர்ந்து என்னை ஜாமீனில் விடுவிக்குமாறு பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்

(ஜாமீனில் விடும் குற்றங்கள், ஜாமீனில் விடக்கூடாத குற்றங்கள், நிபந்தனை தளர்வு போன்றவற்றிலும் குற்றம் சாட்டப்பட்டவர் தானே தனது மனுவை வழக்கறிஞர் இல்லாமல் தாக்கல் செய்யலாம். அதேபோன்று சரண்டர் மனு, வழக்கு முன்னெடுப்பு, சரணடைந்து ஜாமீனில் செல்வதற்கான மனுவையும் வழக்கறிஞர் இல்லாமல் தாக்கல் செய்யலாம்.)

No comments:

Post a comment