26/04/2017

5791 - ...திருமணம் செல்லாது என்று, கணவர் சார்பில் கொடுக்கப்படும் அறிவிப்பு மாதிரி, நன்றி ஐயா. Dhanesh Balamurugan

அனுப்புனர் :
ப. தனேஷ் பாலமுருகன், பி, ஏ., பி, எல்
அட்வகேட்
திருவைகுண்டம்
பெறுநர் :
மலர் க/பெ முகிலன்
15,தெற்கு மாடத் தெரு
திருவைகுண்டம்
அன்புடையீர்,
எனது கட்சிக்காரர் திரு. முகிலன் த/பெ பரமசிவன், 81,திருவள்ளுவர் தெரு, திருவைகுண்டம் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த அறிவிப்பு தங்களுக்கு கொடுக்கப்படுகிறது.
தங்களுக்கும், எனது கட்சிக்காரருக்கும் 4.3.2017ம் தேதியில், திருவைகுண்டம் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடந்தது.
தாங்கள் பூப்படையாத நிலையில், எனது கட்சிக்காரரை திருமணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
தாங்கள் பூப்படையாமல் எனது கட்சிக்காரருடன் செய்து கொண்டிருக்கும் திருமணம் சட்டப்படி செல்லாநிலைத் திருமணம் ஆகும்.
தாங்கள் பூப்படையாமல் இருப்பதால் தான் எனது கட்சிக்காரருடன் உடலுறவு கொள்வதை தவிர்த்து வந்திருக்கிறீர்கள்.
தாங்கள் பூப்படையவில்லை என்பதை மருத்துவ ரீதியாக கண்டறிய எனது கட்சிக்காரர் நீதிமன்றத்தில் கூடிய விரைவில் மனுத்தாக்கல் செய்ய இருக்கிறார்.
தாங்கள் பூப்படையாமல் இருப்பதால் தங்களுக்கும் எனது கட்சிக்காரருக்கும் இடையிலான திருமணம் பூர்த்தியாகவில்லை. அதனால் தங்களுக்கும் எனது கட்சிக்காரருக்கும் இடையில் நடந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக எனது கட்சிக்காரர் உரிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
(ஒரு சட்ட அறிவிப்பை வழக்கறிஞர் மூலம் தான் அனுப்ப வேண்டும் என்று அவசியம் இல்லை. பாதிக்கப்பட்டவர் நேரிடையாகவே அனுப்பலாம். அவ்வாறு அனுப்ப நினைப்பவர்கள் வழக்கறிஞர் பெயருக்கு பதில் தங்களது பெயர் மற்றும் முகவரியை குறிப்பிட்டு கொள்ளவும்)
(அதேபோல் "எனது கட்சிக்காரர்" என்று இருப்பதை "எனக்கும்" என்று மாற்றிக் கொள்ளவும்)

No comments:

Post a comment