26/04/2017

5792 - காசோலை மோசடி வழக்கு, புகார்தாரரால் கொடுக்கப்படும் அறிவிப்பு மாதிரி, நன்றி ஐயா. Dhanesh Balamurugan

அனுப்புனர் :
ப. தனேஷ் பாலமுருகன், பி, ஏ., பி, எல்
அட்வகேட்
திருவைகுண்டம்
பெறுநர் :
மலர் க/பெ முகிலன்
15,தெற்கு மாடத் தெரு
திருவைகுண்டம்
அன்புடையீர்,
பொருள் - மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 138(b)-ன்படி கொடுக்கப்படும் அறிவிப்பு
தாங்கள் எனது நெருங்கிய நண்பர் ஆவீர்கள். அதனையிட்டு தங்களுடைய குடும்ப அவசிய செலவுகளுக்கு பணம் தேவைப்பட்டதால் என்னிடம் 9.12.2016ம் தேதியில் எனது வீட்டிற்கு வந்து ரூ. 2,00,000/- கடனாக பெற்றுக் கொண்டு அதனை மூன்று மாதத்தில் திருப்பி செலுத்திவிடுவதாக கூறி நான் பணமாக பெற்றுக்கொள்ளும் பொருட்டு தங்கள் பெயரிலுள்ள குரும்பூர், பாரதியார் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கணக்கு காசோலை எண் - 699931 மூலம் ரூ 2,00,000/-க்கு காசோலை கொடுத்தீர்கள். மேலும் நான் 8.1.2017ம் தேதி தங்களை நேரிடையாக சந்தித்து கடன் பணத்தை கேட்ட போது தாங்கள் என்னிடம் காசோலையை வங்கியில் செலுத்தி பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறினீர்கள். தங்களின் பேச்சினை நம்பி நான் 9.1.2017ம் தேதியன்று நீங்கள் கொடுத்த காசோலையை திருவைகுண்டம் பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள எனது கணக்கில் வசூலுக்காக தாக்கல் செய்தேன். ஆனால் தங்கள் வங்கி கணக்கில் போதிய அளவுக்கு பணம் இல்லை என்று குறிப்பிட்டு தாங்கள் கொடுத்த காசோலை 10.1.2017ம் தேதி அன்று திருப்பப்பட்டு விட்டது. தாங்கள் என்னிடம் பெற்ற கடன் தொகை ரூ. 2,00,000-யும் மோசடி செய்ய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் தங்கள் வங்கி கணக்கில் போதிய அளவுக்கு பணம் இல்லை என்று நன்கு தெரிந்திருந்தும் காசோலையை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். தாங்கள் என்னை ஏமாற்றி உள்ளீர்கள். தங்களின் செயல்கள் அனைத்தும் சட்ட விரோதமானதாகும்.
ஆகவே இந்த அறிவிப்பு கண்ட 15 நாட்களுக்குள் காசோலையில் குறிப்பிட்டுள்ள தொகை ரூ. 2,00,000/-யும் என்னிடம் செலுத்தி தங்கள் காசோலையை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து கொள்கிறேன். தவறினால் தங்கள் மீது நான் மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 138ன் கீழ் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்வேன் என்றும் அதனால் எனக்கு ஏற்படும் சகல செலவுகளுக்கும், நஷ்டத்திற்கும் தாங்களே பொறுப்பேற்க வேண்டும் என்று இதன்மூலம் அறிவிக்கிறேன்.

No comments:

Post a comment