Saturday, April 29, 2017

5798 - நகல் மனுக்கள், நன்றி ஐயா. நல்வினை விஷ்வராஜூ அவர்கள்

நகல் மனுக்கள்
பொது மக்கள் தங்களுக்கு தேவைப்படும் வருவாய்க் கணக்குகளின் நகல்கள் மற்றும் இதர ஆணைகளின் நகல்களை சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களிலிருந்து உரிய விண்ணப்பம் அளித்து பெற்றுக் கொள்ளலாம்.
மேற்படி ஆவண நகல்கள் நேரிடையாக அவர்களுக்குத் தொடர்புடைய தாகவோ அல்லது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுபவையாகவோ இருத்தல் வேண்டும்.
இரகசியத் தன்மை உடைய ஆவணங்கள் தவிர்த்து இதர ஆவணங்களின் நகல்கள் வழங்கப்படும்
ஆவணங்களின் நகல்கள் பெற தேடு கூலியாக ஒவ்வொரு ஆவணத்திற்கும் முதல் வருடமாக இருப்பின் ரூ.10/-ம் அதற்கு முந்தைய ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.5/-ம் செலுத்திட வேண்டும்.
ஆவணங்களின் நகல்கள் வட்ட அலுவலகங்களில் தலைமையிடத்துத் துணை வட்டாட்சியராலும்
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளராலும் சான்றொப்பமிடப்படும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரால் அதிகாரம் அளிக்கப்பட்ட அலுவலரால் சான்றொப்பமிடப்படுதல் வேண்டும்.
(வருவாய் நிலை ஆணை எண்-173 மற்றும் மாவட்ட அலுவலக நடைமுறை நூல்)
விண்ணப்பம்:-
வெள்ளை தாளில் எழுதியோ தட்டச்சு செய்தோ தரலாம் ரூ 3-க்கு நீதிமன்ற கட்டண ஒட்டு வில்லை (கோர்ட்டு பீஸ் ஸ்டாம்ப்) ஒட்ட வேண்டும்
கட்டணம் செலுத்தும் முறை:-
கட்டணத்தை அரசு கருவூல செலுத்து சீட்டு ( டிரஸ்சரி சலான்) மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும் . சலானில் மனு செய்ய உள்ள அலுவலகத்தில் முத்திரையும் கணக்கு எண்ணும் பெற்று பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தலாம்
நகல் தாள்:-
சில ஆவனங்களுக்கு நகல் தாள் பத்திரம் கொடுக்க வேண்டியிருக்கும் ஆவன விற்பனையாளர்களிடம் கிடைக்கும்
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இதே ஆவனத்தின் நகல் பெற எவ்வித தடையும்
இல்லை
என்ன மாதிரியான ஆவனத்தை நகல் கேட்கலாம்
எடுத்துக்காட்டிற்காக
1. பட்டா
2. சிட்டா
3 அடங்கல்
4 வரைபடம்
5 வாரிசு சான்றிதழ்
6 லைசென்ஸ் (துப்பாக்கி கணிமம் சுரங்கம் பட்டாசு )
வட்டாட்சியர் உத்திரவு
கோட்டாட்சியர் உத்திரவு
மாவட்ட வருவாய் அலுவலர் உத்திரவு
மாவட்டாட்சியரின் நேர்முக உதவியாளர்கள் உத்திரவு
மாவட்ட வருவாய் அலுவலர் உத்திரவு
மாவட்டட்சியர் உத்திரவு
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஆவன நகல் பெறுவதும்
சாட்சிய சட்டத்தில் ஆவன நகல் பெறுவதும்
வருவாய் நிலை ஆணை படி ஆவன நகல் பெறுவதும்
வெவ்வேறானவை
ஒரே நேரத்தில் மூன்று சட்ட வழியிலும் நகல் பெற எவ்வித தடையும் இல்லை

No comments:

Post a Comment