07/07/2017

5818 - மாவட்டத்தில் அரசியல் சாசனத்தை அமுல்படுத்தக் கோருதல் தொடர்பாக, ந்ன்றி ஐயா. Thindal Subramanian Perumal

பதிவுத் தபால் ஒப்புகையுடன். 

அனுப்புதல்;
திரு.பெ சுப்ரமணியன் M.A. 9442090501
LAW FOUNDATION
6. ரோஜா கார்டன், திண்டல்,
ஈரோடு - 638012. 

பெறுதல்:

திரு. மாவட்ட ஆட்சியர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
ஈரோடு.

மதிப்புக்கு உரிய ஐயா, வணக்கம். 

பொருள் ;

1. மாவட்டத்தில் அரசியல் சாசனத்தை அமுல்படுத்தக் கோருதல் தொடர்பாக.
2. குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியரே தனது குற்றம் குறித்து தானே விசாரிக்க பயன்படுத்தும் சட்டம் எது ? என்பதை ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாக தெரிவிக்க கோருதல் – தொடர்பாக.
பார்வை;
1. இந்திய அரசியல் சாசனம் கோட்பாடு 51-A (0)
2. UNIVERSAL DECLARATION OF HUMAN RIGHTS -1948
3. இந்திய அரசியல் சாசனம் கோட்பாடு -20.
1. இந்திய அரசியல் சாசனம் யாருக்கும் எதேச்சதிகாரம் அளிக்கவில்லை. அரசு அதிகாரி எந்த சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறார் என்று குடிமக்களுக்குச் சொல்ல வேண்டும்.
2. அரசு அதிகாரி எந்த சட்டப்படி செயல்படுகிறார் ? என்றும் மக்களுக்குச் சொல்ல வேண்டும். அரசு அதிகாரி தான் தோன்றித்தனமாக செயல்பட முடியாது.
3. CHECK AND BALANCE என்பது அரசியல் சாசனத்தில் உள்ளது. அரசு, அதன்படி செயல்படவேண்டும். தாங்கள் அதன்படி காவல் துறைமுறைகேடுகளைச் சோதித்து சரி செய்து உள்ளீர்களா ? என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
4. அரசு அதிகாரி தான் தோன்றித்தனமாக செயல்படுவது அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகும். சட்டவிரோதச் செயல் ஆகும்.
5. அரசு அதிகாரியிடம் மக்கள் கேள்விக்குப் பதில் இல்லை என்றாலே அங்கு அநீதி ஆட்டம் போடுகிறது என்று தான் பொருள்.
6. இது குறித்து தங்களிடம் இருந்து உரிய பதில் மற்றும் நடவடிக்கையை நடவடிக்கையை உடனே எதிபார்க்கிறோம். இல்லையெனில், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நாங்கள் செல்ல வேண்டியது அவசியமாகிவிடும்.
7. மாவட்ட ஆட்சியரிடம் காவல் துறை அதிகாரிகளின் செய்த சட்ட விரோத செயல் குறித்தது புகார் அளித்தால் அதனை குற்றம் புரிந்த அதிகாரியே விசாரிக்க செய்வது எந்த சட்டப்படி ? என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறோம். இத்தகைய செயல் மனுதாரை அவமதிப்பது போல உள்ளது. இது மனித உரிமை மீறல் ஆகும்.
8. மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தை மாவட்ட நிர்வாகம் மதித்து ஏற்றுச் செயல்பட வேண்டும்.
9. இந்திய அரசியல் சாசனம் கோட்பாடு -20.- ன் படி குற்றம் செய்த எந்தவொரு அரசு ஊழியரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
10. சீர் திருத்தம் செய்ய வேண்டியது இந்திய அரசியல் சாசனம் கோட்பாடு 51-A (0) –ன் படி எங்களது கடமை ஆகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
.
இப்படிக்கு,
மனுதாரர்

திரு,பெ.சுப்ரமணியன் M.A.
LAW FOUNDATION.
தேதி : 29.06.2017
இடம்: ஈரோடு.

No comments:

Post a comment