07/07/2017

5817 - கு.வி.மு.ச.பிரிவு 156 (3) – ன் கீழ் மனு., நன்றி ஐயா. Thindal Subramanian Perumal

மாதிரி மனு. ENCLOSED Rs. 2 c.f.s. கான்கிரீட் சீட் 
.
மேதகு. குற்றவியல் நடுவர் மன்றம் எண் : 1
ஈரோடு. 
மனு எண் : .................../ 2016. 
சுருக்கு விசாரணை மனு எண் : ............... / 2016
.
திரு. பெ. கிருஷ்ணமூர்த்தி வயது சுமார் 58 வருடங்கள்.
த / பெ பெரியசாமி,
D.248- வீட்டு வசதி பிரிவு ,
கொல்லம் பாளையம்,
ஈரோடு – 638002. ………………… புகார் மனுதாரர்.
. / எதிர் /
திரு. காவல்நிலையப் பொறுப்பாளர் .
சூரம்பட்டி காவல் நிலையம் ( வடக்கு )
சூரம்பட்டி,
ஈரோடு – 638002. ………………………குற்றம் சாட்டப்பட்டவர்.
.
கு.வி.மு.ச.பிரிவு 156 (3) – ன் கீழ் மனு.
1. புகார் மனுதாரர் திரு. கிருஷ்ணமூர்த்தி த / பெ பெரியசாமி வயது சுமார் 58 வருடங்கள் ஆகிய நான், புகார் மனுதாரர் ஆவேன். நான் மேற்படி முகவரியில் சுமார் 3O ஆண்டுகளாக வசித்து வருகிறேன்.
2. கடந்த 25.05.2016. எதிரி திரு. கோபால் மற்றும் பிறர் தெருவில் என் வீட்டு முன் தெருவின் ஓரத்தில் சுமார் 25 வருடங்களாக இருந்து வந்த 1, வேப்ப மரம், 2. முருங்கை மரம் 3. சப்போட்டா மரம் ஆகியவற்றை நான் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து முன் விரோதம் காரணமாக திட்டமிட்டு 1. தீயிட்டும் 2. அரிவாளால் வெட்டியும் 3. போக்லைன் எந்திரம் கொண்டு சாய்த்தும் வேரோடு பிடுங்கியும் அழித்து உள்ளனர். இது இ.த.ச. பிரிவு .............. –ன் கீழ் கைது செய்யக் கூ டிய குற்றம் என்று கு.வி.மு.ச. பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
3. இது குறித்து ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதற்கு காவல் நிலையத்தில் நாள் 25.06.2016 அன்று C.S.R எண் : 212 / 2016 கொடுக்கப்பட்டு உள்ளது.
4. மேற்படி வழக்கு கைது செய்யக் கூடிய குற்றங்கள் உடையது ஆகும். அதற்கு மேற்படி எதிரியால் இதுவரை கூட F.I.R. போடப் படவில்லை.
5. இது குறித்து ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. முறைஈடு சார்பு நாள் ...................................ஆகும். அவர் கு.வி.மு.ச, பிரிவு 154 (3) - ன் கீழ் இதுவரை ( 29.06.2016 ) நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. அவர் தனது கடமையைச் செய்யவில்லை எனத் தெரியவருகிறது.
6. ஆகையால், இம்மேதகு நீதிமன்றத்தில் இம்முறையீடு தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
7. மேதகு நீதிமன்றத்தைப் பணிவுடன் வேண்டுவது :
. மேதகு நீதிமன்றம், F.I.R. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யத் தேவையான உத்திரவுகளையும் மற்றும் தேவையெனக் கருதும் மற்ற உத்திரவுகளையும் உடனே பிறப்பித்து நீதி வழங்கும்படி பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.
. இப்படிக்கு,
புகார் மனுதாரர்,
.
( கையொப்பம். )
இணைப்பு ஆவணங்கள். ( சுய சான்றிட்ட நகல்கள் )
1. சூரம்பட்டி காவல் நிலையத்தில் சார்வு செய்யப்பட்ட புகார் மனு. நாள் ...........................................
2. மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் சார்வு செய்யப்பட்ட முறையீடு நாள் .......................
இடம்:
நாள்:

No comments:

Post a comment