டெல்லி உயர்நீதிமன்றம் "Dr. பைனாவ் சந்தரா சென் Vs திருமதி கமலா மாத்தூர் (1983-Crl.LJ-A-495)" என்ற வழக்கில், உ. வி. மு. ச கட்டளை 39 விதிகள் 1 மற்றும் 2 ன் கீழ் வழங்கப்பட்ட உறுத்துக் கட்டளை உத்தரவை மீறி செயல்படும் நபர்களை தண்டிப்பதற்கான அதிகாரம், அந்த உறுத்துக் கட்டளை உத்தரவை பிறப்பித்த நீதிமன்றத்திற்கு தான் உள்ளது. ஓர் உறுத்துக் கட்டளை உத்தரவை மதிக்காமல் செயல்படுவது ஓர் உரிமையியல் அவமதிப்பு ஆகும். அது நீதிமன்றங்கள் அவமதிப்புச் சட்டம் பிரிவு 2(b) ல் கூறப்பட்டுள்ள விளக்கத்திற்குள் வருவதில்லை. அந்த செயல்கள் மீது உ. வி. மு. ச கட்டளை 39,விதி 2(A) ல் கூறப்பட்டுள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் நீதிமன்றங்கள் அவமதிப்புச் சட்டம் பிரிவு 2(b)ல், இடைக்கால உறுத்துக் கட்டளை உத்தரவை மதிக்காமல் செயல்படும் செயல்கள் குறித்து அந்த பிரிவின் கீழ் பரிசீலிக்க முடியாது. ஏனென்றால் அந்த பிரச்சினை குறித்து உ. வி. மு. ச கட்டளை 39 ன் கீழ் தான் பரிசீலிக்க முடியும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் கல்கத்தா உயர் நீதிமன்றம் "சமீர் குமார் சர்க்கார் Vs மகாராஜா சிங் (1983-Crl.LJ-NOC-1)" என்ற வழக்கில், உ. வி. மு. ச கட்டளை 39 விதி 1 அல்லது 2 ன் கீழ் ஓர் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்து, அந்த இடைக்கால உத்தரவினை மீறி மதிப்பளிக்காமல் செயல்படுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு அதிகாரத்தை உயர்நீதிமன்றங்கள் பயன்படுத்தக்கூடாது. அத்தகைய வழக்குகளில், உறுத்துக்கட்டளை பரிகாரத்தை பிறப்பித்த நீதிமன்றமே உ. வி. மு. ச கட்டளை 39 விதி 2(A) ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒரு சிறப்பு சட்டமும், பொதுச் சட்டமும் உள்ள நிலையில், சிறப்பு சட்டம், பொதுச் சட்டத்தின் மீது மேலோங்கு அதிகாரத்தை கொண்டிருக்கும் என்பது வரையறுக்கப்பட்ட சட்ட நிலைப்பாடு ஆகும். ஓர் உறுத்துக் கட்டளை மதிக்காமல் மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உ. வி. மு. ச கட்டளை 39 விதி 2(A) என்கிற சிறப்பு சட்டப் பிரிவு உள்ள நிலையில், நீதிமன்றங்கள் அவமதிப்புச் சட்டம் என்கிற பொது சட்டத்தை பயன்படுத்த முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
எனவே ஒரு உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட தரப்பினர்கள் மீது உ. வி. மு. ச கட்டளை 39 விதி 2(A) ன் கீழ் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனவும் மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
C. P. NO - 76/2016, DT - 8.3.2016
Rama Krishnan Vs Vijaya Lakshmi and Others
(2016-4-MLJ-271)
(2016-3-CTC-784)
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wWThEbXBFa3NoZjA/view?usp=sharing

No comments:
Post a Comment