Wednesday, July 19, 2017

5849 - வீட்டுமனையை அளக்க இழுத்தடிப்பு தாசில்தார், சர்வயேருக்கு அபராதம் பெரம்பலூர் நுகர்வோர் கோர்ட் உத்தரவு, நன்றி ஐயா. Councel Sree

வீட்டுமனையை அளக்க இழுத்தடிப்பு தாசில்தார், சர்வயேருக்கு அபராதம்
பெரம்பலூர் நுகர்வோர் கோர்ட் உத்தரவு
======================================
பெரம்பலூர்: வீட்டு மனையை அளந்து
தராமல் இழுத்தடித்த தாசில்தார், நிலஅளவையர் உள்பட 3 பேர் ரூ.12 ஆயிரம் இழப்பீடு வழங்க பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்கா வெங்கலம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் தனபால். ஓய்வு எஸ்ஐ . இவர் தனது வீட்டுமனையின் 4புற எல்லைகளை அளந்து தர கோரி வேப்பந்தட்டை தாசில்தாரிடம் விண்ணப்பித்து தாலுகா அலுவலகத்திலுள்ள சர்வேயரிடம் கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 24ம்தேதி பணம் செலுத்தினார். இதன்படி தாலுகா அலுவலகத்திலிருந்து வந்து யாரும் நிலத்தை அளந்து தரவில்லை. இதனையடுத்து 2014ஜூலை 28ம் தேதி மீண்டும் தனது வீட்டுமனையை அளந்து தரும்படி விண்ணப்பித்துள்ளார்.
இந்தமனு குறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டரும் சம்மந்தப்பட்ட நில அள வைத் துறையின் உதவி இயக்குநருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இருந்தும் யாரும் அளந்து தரவில்லை. இதையடுத்து சேவை குறைபாடால் பாதிக்கப்பட்ட தனபால் 2015 டிசம்பர் 16ம் தேதி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது.பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கலியமூர்த்தி, நீதிமன்ற உறுப் பினர்கள் அன்பழகன் ஜெயலட்சுமி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட வேப்பந்தட்டை தாசில்தார், வட்ட நிலஅளவையர், பகுதி நில அளவையர் ஆகியோர் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு ரூ.10ஆயிரம் இழப்பீட்டுத் தொகையாகவும், ரூ2ஆயிரம் வழக்கு செலவிற்காக என மொத்தம் ரூ.12 ஆயிரத்தை வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
thanks - பெரம்பலூர் மாவட்ட செய்தி

No comments:

Post a Comment