Wednesday, July 19, 2017

5850 - ஆகவே உச்ச நீதிமன்ற தீர்ப்பு 9017/2013 படி கூட்டுறவு சங்கங்கள் விலக்களிக்கப்படவில்லை, நன்றி ஐயா. Deepak Perumbol Bhaskar

சிவில் அப்பீல் 9017/2013 உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கூட்டுறவு சங்கங்கள் நேரடியாக பொது அதிகார அமைப்பாக கருத முடியாது எனவும் ஆனாலதனை கட்டுப்படுத்தும் துறை மூலமோ அல்லது கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மூலமோ தகவல் கோரலாம் என்று அதே தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே உச்ச நீதிமன்ற தீர்ப்பு 9017/2013 படி கூட்டுறவு சங்கங்கள் விலக்களிக்கப்படவில்லை.
அவ்வாறு உங்களுக்கு விலக்களிக்கப்பட்டது என்று பதில் அளித்தால் , இவ்வாறு விளக்கி மேல்முறையீடு செய்யலாம். இதனை மெழுகேற்றிக்கூட செய்யலாம்.
“கேரள மாநிலத்தில் தளப்பாளம் சேவை கூட்டுறவு சங்கத்தை பொது அதிகார அமைப்பாக அந்த மாநில அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. கேரளா உயர்நீதிமன்றமும் இதனை உறுதிப்படுத்தியது.
அதன் பிறகு அந்த கூட்டுறவு சங்கம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரனை செய்த உச்ச நீதிமன்றம் கேரளா உயர்நீதிமன்ற உத்திரவை ரத்து செய்தது. (இதனை QUASH ORDER) என்று குறிப்பிடுவார்கள். அவை பொது அதிகார அமைப்பு என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து மட்டுமே செய்தது. அவை விளக்கலிக்கப்பட்டன என்று குறிப்பிடவில்லை.
மேலும் இதே தீர்ப்பில் பக்கம் 53,54,55 இல் , கூட்டுறவு சங்கமானது கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அல்லது எதாவது ஒரு அரசு துறையால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகவே அந்த துறை மூலம் தகவல் கோரலாம் என்று வழிகாட்டியுள்ளது.
இது புதிய வழிகாட்டி அல்ல. தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலேயே பிரிவி 2(f) இதனை வலியுறுத்துகின்றது. இந்த பிரிவின் மூலம் ஒரு தனியார் அமைப்பை அதனை கட்டுப்படுத்தும் அரசு துறை மூலம் தகவல் கோரலாம்.
ஆகவே நான் கோரிய தகவல்கள்________துறையினரால் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளக்கூடிய தகவல்கள் ஆகும். நான் கோரிய அனைத்து ஆவணங்களும் ________(துறை) அலுவலரால் ஆய்வு செய்யப்பட வேண்டியவை. ஆகவே எனது முதல் மேல்முறையீட்டு மனு மீது உரிய விசாரணை நடத்தி கோரிய தகவல்களை பிரிவு 7(6) இன் படி செலவு தொகையின்றி அளிக்க கேட்டுக்கொள்கின்றேன்"

No comments:

Post a Comment