Tuesday, June 19, 2018

5934 - கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டிய ஆவணம், பதிவு செய்யப்படாதபொழுது, அதை ஏற்க முடியுமா? நன்றி ஐயா. Dhanesh Balamurugan

சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு " A. C. லட்சுமிபதி மற்றுமொருவர் Vs A. M. சக்கரப்பன் ரெட்டியார் மற்றும் பலர் (2001-1-MLJ--1)(2000-2-TNLJ-315)" என்ற வழக்கில், உரிய முத்திரைக் கட்டணம் செலுத்தப்படாமலும், கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டிய ஓர் ஆவணம் பதிவு செய்யப்படாமலும் இருந்தால் அந்த ஆவணத்தை துணை நோக்கங்களுக்காக கூட நீதிமன்றங்கள் தங்களுடைய பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
இந்திய பதிவுச் சட்டம் பிரிவு 17(1)(b) ன் கீழ் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டிய ஓர் ஆவணம் பதிவு செய்யப்படாமல் இருந்தால், அதனை சான்றாவணமாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பது தெளிவான சட்ட நிலைப்பாடு ஆகும்.
எனவே இந்திய பதிவுச் சட்டத்தின்படி கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டிய ஓர் ஆவணம், பதிவு செய்யப்படாத போது, அந்த ஆவணத்தை சான்றாவணமாக ஏற்றுக் கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRP. NO - 1810/2017
DT - 8.6.2017
சுந்தர்ராஜன் Vs செளசல்யா மற்றும் பலர்
2017-4-TLNJ-CIVIL-353

No comments:

Post a Comment