Thursday, October 24, 2019

6004 - தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 18(1)-ன் கீழ் புகார் மனுவின் மாதிரி படிவம், நன்றி ஐயா. Leenus Leo Edwards

தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 18(1)-ன் கீழ்
புகார் மனுவின் மாதிரி படிவம்
.
1) முதல் பாராவை தேவைக்கேற்ப கீழ்கண்டவாறு மாற்றிக்கொள்ளுங்கள்.
.
(கோரிய தகவல்கள் தனிப்பட்ட நபரின் தகவல்கள் என்று எனக்கு தகவலை வழங்க மறுக்கின்றார்)
.
(பொது தகவல் அலுவலரானவர் எனது மனுவை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டார்)
.
(பொது தகவல் அலுவலரானவர் எனது மனுவிற்கு 30 நாட்கள் கடந்தும் பதில் அளிக்கவில்லை)
.
(பொது தகவல் அலுவலரானவர் நான் கோரிய தகவலுக்கு, ஆவணங்களுக்கு நியாயமான கட்டணத்தைவிட அதிகமான தொகை கோருகின்றார்)
.
(பொது தகவல் அலுவலரானவர் பொய்யான, உண்மைக்கு புறம்பான தகவலை அளித்துள்ளார்)
.
(பொது தகவல் அலுவலரின் அலுவலகத்தில் ஆய்வு செய்ய சென்றால், ஆய்வு செய்வதற்கான அனுமதியை மறுக்கின்றார்)
.
2. கோரிய தகவல்கள் பிரிவு 4(1)(b)-ல் அடங்கும் தகவல்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அந்த பிரிவில் அடங்காத தகவல்கள் என்றால், மேற்கூறிய மாதிரி படிவத்தில் பாரா 2-யை நீக்கிவிடவும். என்னை பொறுத்த வரையில் கோரும் தகவல்கள் ஏதாவது ஒரு வகையில் மேற்படி பிரிவில் அடங்கும். அல்லது, அவ்வாறு அடங்கும் வகையில் உங்கள் தகவலை கோர முயற்சியுங்கள்.
.
3. இந்த புகார் மனுவில் எந்த இடத்திலும் கோரிய தகவலை வழங்கவோ, அல்லது தகவல் வழங்காதற்கு இழப்பீடோ கோரக்கூடாது. அவ்வாறு கோரினால், புகாரை பெற்றுக்கொண்ட தகவல ஆணையமானது, முதல் முறையீடு இன்றி இரண்டாம் முறையீடானது தகவல் ஆணையத்திற்கு தகவல் கோரி நேரடியாக புகாராக மனு செய்யப்பட்டுள்ளது என்று காரணம் காட்டி, புகார் மனுவானது நிரகாரிக்கப்படலாம். நினைவில் கொள்ளுங்கள், தகவல் மற்றும் இழப்பீடு கோரினால், முதல் மேல் முறையீட்டினை முடித்துவிட்டு, பின்னர் பிரிவு 19(3)-ன் கீழ் இரண்டாம் மேல் முறையீடுதான் செய்ய வேண்டும்.
.
4. புகார் என்பது மேல் முறையீடு அல்ல. அது பொது தகவல் அலுவலர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆகும். ஆகவே, புகார் செய்வதற்கு போதுமான முகாந்தரம் இருக்கின்றதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தண்டனை பிரிவுகள் 20(1) மற்றும் பிரிவு 20(2) ஆகியவைகள், பிரிவு 18(1) மற்றும் 19(3) ஆகியவைகளுக்கு பொருந்தும்.
.
5. உதாரணமாக மனுதாரர் ஒரு அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் விபரங்களை கேட்கின்றார். இதை பொது தகவல் அலுவலரானவர் தனிப்பட்ட நபர் தகவல் என்று மறுத்தால் தாரளமாக புகார் செய்யலாம் ஏனெனில் பிரிவு 4(1)(b)(ix)-ன்படி அந்த அலுவலகம் தானகவே முன் வந்து அவர்களது இணையதளத்திலும் நோட்டிஸ்போர்டிலும் வெளியிடப்படவேண்டி தகவல்கள் ஆகும். தானாக வெளியிடப்படவேண்டியதை, மனுதாரருக்கு வழங்க மறுக்கின்றார் என்றால் அதற்காக புகார் செய்யலாம்.
...
6. சட்டத்தின் விதிகளின்படி 30 நாட்களுக்குள் பொது தகவல் அலுவலரானவர் தகவலை வழங்க வேண்டும். அதற்காக 31 வது நாள் புகார் செய்யாமல், 40 நாட்கள் வரை காத்திருந்து புகார் செய்யலாம்.
.
7.பொது தகவல் அலுவலர், மனுதாரரின் மனுவை திருப்பி அனுப்பிவிட்டாலோ, ஆவணங்கள் வழங்க நியாமற்ற கட்டணத்தை கோரினாலோ மற்றும் பொய்யான தகவல்கள் வழங்கப்பட்டாலோ, உடனே புகார் செய்யலாம்.
.
8.புகாரின் நகலை பொது தகவல் அலுவலருக்கு கட்டாயம் அனுப்புங்கள்.
.
9. புகாரை தொடர்ந்து, தகவல் கோரி முதல் மேல் முறையீட்டினை வழக்கம்போல தனியாக செய்யுங்கள்.
.
10. புகார் செய்த பிறகு, தகவல் பெறப்பட்டால், மறக்காமல், அதன் விபரத்தை ஆணையத்திற்கு கூறி புகாரை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள்.


No comments:

Post a Comment