Monday, April 27, 2015

1436 - நீதிமன்ற விற்பனை குறித்த தகவல் சட்ட மனு மாதிரி, நன்றி ஐயா. திரு. Antony Doss அவர்கள்

1. திண்டுக்கல் மாவட்ட நீதி மன்ற வளாகத்தில் நீதிமன்ற வில்லைகள் அரசால் விற்பனை செய்யப்படுகிறதா(விற்பனை முகவர் மூலம் அல்லாமல்) என்ற தகவல் தரவும்.

2. மேற்படி அரசால் விற்பனை செய்யப்பட்டால் விற்பனை செய்பவரின் பெயர், பதவி அவரது இருக்கை/அறை பற்றிய தகவல் தரவும்.

3. தனி நபர்கள்/விற்பனை முகவர்கள் அரசு உரிமம் பெற்றோ அல்லது பெறாமலோ நீதி மன்ற வளாகத்துக்குக்குள் நீதிமன்ற வில்லை விற்பனை செய்ய அனுமதிக்கப் பட்டிருப்பின் அவர்களின் பெயர், உரிமக் காலம் மற்றும் உரிமம் அளித்த போது அவர்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள் ஆகிய தகவல் தரவும்.

4. நீதி மன்ற வளாகத்துக்குக்குள் நீதி மன்ற வில்லைகளை அவற்றின் முகமதிப்பிற்கு மேல் விலை வைத்து விற்பவர்களைப் பற்றி முறையிட்டால் அதன் பேரில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ள அலுவலரின் பெயர், பதவி மற்றும் முகவரி தரவும்.

5. நீதி மன்ற வளாகத்துக்குக்குள் அமைந்துள்ள வழக்கறிஞர் சங்க அலுவலகத்தில் நீதிமன்ற வில்லை விற்பனை செய்ய எந்த அரசு விதிகளின்படி அனுமதிக்கப் பட்டுள்ளது என்ற தகவல் தரவும்.

6. தங்கள் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பொது மக்களிடமிருந்து மனுக்களை நேரில் பெற்று ஒப்புகைச்சான்று அளிக்கவல்ல அலுவர் பெயர், பதவி மற்றும் அவர் இருக்கும் அலுவலக அறை எண் போன்ற விவரம் தரவும்.

7. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பொது மக்களிடமிருந்து மனுக்களை நேரில் பெற்று அதற்கு அளிக்கப்படும் ஒப்புகைச்சீட்டின் மாதிரி ஒன்று தரவும்.

8. தங்கள் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பொது மக்கள் விண்ணப்பம் அளித்து அதற்கான கட்டணம் பணமாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளதா என்ற தகவல் தரவும்.

9. மேற்படி கட்டணம் பணமாக பெறுமிடத்தில் அதற்காக தங்கள் அலுவலகத்தில் கொடுக்கப் படும் பற்றுச்சீட்டின் நகல் தரவும்.

10. சட்டப்பிரிவு 7 (8) (iii)-ன் படி, முதல் மேல் முறையீட்டு அலுவலரின் முழு முகவரி தரவும்.

11. மேற்சொன்ன இனங்களுக்குரிய தகவல்கள் / ஆவணங்களில் எவையேனும், சட்டப்பிரிவு 8 (1) (b)-ன் படி தடை செய்யப்பட்டிருப்பின், ஆதாரங்களுடன் முழு விவரங்கள் தரவும்.

No comments:

Post a Comment