Wednesday, February 24, 2016

4992 - இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 300-A -இல் உள்ள உரிமை குறித்து வழக்கு, Civil Appeal Nos. 662 - 663 of 2008, 11-12-2014, Supreme Court Of India, நன்றி ஐயா. Sampath Masilamani

சூழல் :
மேல்முறையீட்டாளர்கள் விவசாய நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் பட்டாதாரர்கள். ரூ.731.70 நில வரி செலுத்த தவறியதால், அதை வசூலிக்கும் பொருட்டு அவர்களுடைய நிலத்தை ஏலத்தில் விற்பனைக்கு கொண்டுவந்தனர். ஏலத்தில் யாரும் வாங்காததினால், அரசே ரூ.1/- க்கு வாங்கி, அதன் பகுதியை ஐ ஓ சி க்கு விற்றுவிட்டது. இந்த விற்பனை தெரிந்தவுடன், மேல்முறையீட்டாளர்கள், வாரியத்திடம் மேல்முறையீடு செய்ததில், துணை ஆணையர் சட்டத்தை பின்பற்றாத காரணத்தினாலும், முன் அறிவிப்பு கொடுக்க தவறியதாலும் விற்பனையை நீக்கறவு செய்தது.

கேள்வி :
மேல்முறையீட்டாளர்கள்,வரிவிதிப்பு குறித்து அறிவிப்பு மற்றும் விற்பனை, ஏலம் குறித்து முன்னறிவிப்பு பெற அறுகதையுடையவரா?

பதில் :
ஒருவர் சட்டபடி கட்டவேண்டிய பணத்திற்கு கண்டிப்பாக அறிவிப்பு வழங்கவேண்டும். அதேபோல், வரி செலுத்தாமைக்குண்டான அறிவிப்பும் வழங்கவேண்டும். அவருடைய சொத்தை ஏலம்/விற்பனை குறித்தும் அறிவிப்பு வழங்க வேண்டும். மீறினால், இந்திய அரசியலமைப்பு சட்ட்ம் 300-A ன் கீழான உரிமை பாதிக்கும்.

குறிப்பு :
Sri Prabin Ram Phukan & Anr – Vs – State of Assam – Civil Appeal Nos. 662 - 663 of 2008 - Hon’ble Mr.Justice M.Y.Eqbal & Hon’ble Mr.Justice Abhay Manohar Sapre - Order dated 11.12.2014.

No comments:

Post a Comment