24/02/2016

4991 - சட்டபூர்வ அறிவிப்பு அனுப்பப்பட்டு மறுக்கப்பட்டது – ஆனால் முறையான விலாசத்திற்கு அனுப்பப்படவில்லை – வழக்கு, Criminal Appeal No:1258 of 2004, 11-12-2014, High Court, Chennai, நன்றி ஐயா. Sampath Masilamani

சட்டபூர்வ அறிவிப்பு அனுப்பப்பட்டு மறுக்கப்பட்டது – ஆனால் முறையான விலாசத்திற்கு அனுப்பப்படவில்லை – வழக்கு
சூழல் :
காசோலை திருப்பப்பட்ட வழக்கில் புகார்தாரர் சட்டபூர்வ அறிவிப்பை எதிரிக்கு அனுப்பியதாகவும் அதை வாங்க மறுத்து அது திருப்பப்பட்டதாகவும் வழக்கு. ஆனால் எதிரி தான் அந்த முகவரியில் இல்லையென்றும் தனக்கு அறிவிப்பு முறையாகச் சார்வு செய்யப்படவில்லை என்றும் கட்சி செய்தார். தன்னுடைய சரியான முகவரி குறித்தும் ஆவணங்கள் தாக்கல் செய்தார்.

கேள்வி :
பிரிவு 27 General Clauses Act ன் படி புகார்தாரருக்கு சாதகமாக அனுமானம் செய்ய வேண்டுமா ?

பதில் :
எதிரி தன்னுடைய முகவரி குறித்து ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளதால் சட்டப் படியான அனுமானம் செய்ய முடியாது. எதிரிக்கு முறையான அறிவிப்பு சார்வு செய்யப்படாததால் எதிரி விடுவிக்கப்பட்டார்.

குறிப்பு :
R.Pandimurugan –Vs- R.Palanisamy – Criminal Appeal No:1258 of 2004 – Hon’ble Mr.Justice R.S.Ramanathan – Order dated 11/12/2014

No comments:

Post a comment