24/02/2016

4990 - குறுக்கு விசாரணை பதிலும், பொய் சாட்சியும் … வழக்கு, Crl.R.C. No. 1211 of 2014, 05-01-2016, High Court, Chennai, நன்றி ஐயா. Sampath Masilamani

குறுக்கு விசாரணை பதிலும், பொய் சாட்சியும் … வழக்கு
சூழல் :
எதிரி அரசு அலுவலகத்தில் புகுந்து, அங்கு இருந்தவர்களை மிரட்டியதாகவும், பொருட்களை உடைத்ததாகவும் வழக்கு. அதில் அவரை குற்றவாளி எனக் கண்டு தீர்ப்பு வழங்கும் பொழுது, அரசு தரப்பு சாட்சிகள் 1-3 நபர்கள் குறுக்கு விசாரணையில் கூறிய பதில்கள் பொய்சாட்சி என கண்டு, புகார் அளித்து அதை அதே நடுவரே கோப்பில் எடுத்துக் கொள்கிறார்.

கேள்வி :
(1) நடுவர் தான் புகார் கொடுத்து தானே கோப்பில் எடுத்தது சரியா ?

பதில் :
(1) தவறு. அவரே புகாரை கோப்பில் எடுக்க முடியாது.

குறிப்பு :
Palanisamy & others –Vs- The State – Crl.R.C. No. 1211 of 2014 – Hon’ble Mr. Justice C.T. Selvam – Order dated 05/01/2016

No comments:

Post a comment