24/02/2016

4989 - மின்சாரம் தாக்கி உயிரிழப்பு – ரிட் மனுவில் நஷ்ட ஈடு – வழக்கு, W.P.No. 32722 of 2014, 04.01.2016, High Court, Chennai, நன்றி ஐயா. Sampath Masilamani

மின்சாரம் தாக்கி உயிரிழப்பு – ரிட் மனுவில் நஷ்ட ஈடு – வழக்கு.
சூழல் :
உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததில், இரு சக்கர வாகனத்தில் சென்ற மனுதாரரின் கணவர் உயிரிழந்தார். ரூபாய் முப்பது இலட்சம் நஷ்ட ஈடு கோரி ரிட் மனு. ரிட் மனு நிலைக்கத்தக்கதல்ல என்றும் சம்பவங்கள் குறித்து தரப்பினரிடையே எதிரிடை நிலையிருப்பதால், உரிமையியல் நீதிமன்றம் தான் விசாரிக்க முடியும் என்றும் எதிர்மனுதாரர் எதிர்ப்பு.

கேள்வி :
ரிட் மனுவில் நஷ்ட ஈடு வழங்க முடியுமா ? ரிட் மனு நிலைக்கத்தக்கதா ?

பதில் :
ரிட் மனு நிலைக்கத்தக்கது. ரூபாய் பத்து இலட்சம் நஷ்ட ஈடாக உத்தரவிடப்பட்டது.

குறிப்பு :
K.Sumathy – Vs – The Government of Tamil Nadu, rep. by the Secretary to Government, Energy Department & Anr.- W.P.No. 32722 of 2014 - Hon’ble Mr.Justice T.S.Sivagnanam - Order dated 04.01.2016.

No comments:

Post a comment