28/02/2016

5033 - தன் தரப்பில் விசாரிக்கப்பட்ட சாட்சியை தானே மீண்டும் குறுக்கு விசாரனைக்கு அழைப்பது ... வழக்கு, O.S.A. No. 392 of 2013, 18-12-2013, High Court, Madras, நன்றி ஐயா. Sampath Masilamani

தன் தரப்பில் விசாரிக்கப்பட்ட சாட்சியை தானே மீண்டும் குறுக்கு விசாரனைக்கு அழைப்பது ... வழக்கு சூழல் : மனுதாரர் முதலில் உயிலை உண்மையென நிரூபிக்கும் மனுவை தாக்கல் செய்கிறார். அப்பொழுது, உயிலில் சாட்சிக் கையெழுத்திட்டவர் சாட்சியாக விசாரிக்கப்பட்டு அவரும் உயில் தனக்கு முன்னால் எழுதி கையொப்பம் செய்யப்பட்டதாக சாட்சியமளிக்கின்றார். பின்னர் மூன்றாவது நபர்கள் இந்த உயில் மோசடியானது என கட்சியாடுவதால், மனு வழக்காக மாற்றப்படுகிறது. பின்னிட்டு, சாட்சி விசாரனையில். மேற்படி சாட்சி, தான் உயிலை எழுதியதை பார்க்கவில்லை என கூறி எதிர்வாதி தரப்பில் குறுக்கு விசாரனையும் முடிந்த நிலையில், மனுதாரர் அவரை குறுக்கு விசாரனை செய்ய மீண்டும் அழைக்க மனு செய்கிறார். கேள்வி : (1) சாட்சி விசாரனையும் முடிந்து, குறுக்கு விசாரனையும் முடிந்த பிறகு, மேற்படி மனு தாக்கல் செய்ய முடியுமா ? (2) மேற்படி மனுக்கள் குறித்து கருத்தில் கொள்ளவேண்டியவை யாவை ? பதில் : (1) இந்திய சாட்சிய சட்டப் பிரிவு 154 ல் மேற்படி மனுதாக்கல் செய்ய குறிப்பிட்டு எந்த நிலையும் கூறப்படாததால், எதிர் தரப்பினர் குறுக்கு விசாரனை முடிந்த பிறகும், மேற்படி மனு தாக்கல் செய்யலாம். (2) மனுவின் நோக்கம் நீதிமன்றம் உண்மையை அறிதலாகும். சாட்சி முதலில் ஒன்றை கூறிவிட்டு, பின்னர் மறுதலித்து இருக்க வேண்டும். மீண்டும் அழைப்பதாலேயே அவர் முன்னர் கூறியவை இல்லாமல் போகாது. விசாரனையின் முடிவில் அவரது அனைத்து சாட்சியம் குறித்தும் முடிவு செய்யப்படவேண்டும். குறிப்பு : S. Bhaskaran & Another –Vs- Loganathan (Deceased) & others – O.S.A. No. 392 of 2013 – Hon’ble Mr. Justice N. Paul Vasanthakumar & Hon’ble Mr. Justice P. Devadass – Order dated 18/12/2013

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wOEp4RXd4SURQclU/view?usp=sharing

No comments:

Post a comment