வழக்குரைஞர்
ஒருவர், தமது மாசற்ற கடமையைத் தமது கட்சிக்காரருக்காக மட்டுமல்லாது, நீதிமன்றத்திற்காகவும்
& எதிர்தரப்பினர்க்காகவும் ஆற்றுதல் வேண்டும். நீதி நிர்வாகம் என்பது, ஒரு ஓடையைப்
போன்றது. அதனைத் தூய்மையாகவும் தெளிவாகவும் வைத்திருத்தல் வேண்டும். அதனை மாசுமருவற்றதாக
வைத்திருத்தல் வேண்டும். நீதிநிர்வாகம் என்பது, நீதிமன்றத்திற்கு மட்டும் உரியதன்று;
அது வழக்குரைஞர்களுக்கும் உரியதாகும். வழக்குரைஞர் & நீதிமன்றம் என்பது, நீதிபதிகளை
நியமிப்பதற்கான முதல் தளமாகும். அதனால், வழக்குரைஞர், ஒருவரின் நடத்தையைக் குறித்து,
எந்தவொரு நபரும், விரல் நீட்டிப் பேசுதல் கூடாது. வழக்குரைஞர் ஒருவர், தமது வழக்கை
நடத்தும் பொழுது, ஒரு நீதிமன்ற அதிகாரியாக மட்டுமே செயல்பட வேண்டும் – P. D. Gupta
V. Ram Murthi. (1997) 7 SCC 147
No comments:
Post a Comment