Sunday, April 02, 2017

5747 - காவல் ஆய்வாளர் அவர்களிடம் அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம், இ. சா. ச. 1872-ன் பிரிவு 27 (26)-ன் படி செல்லாது, CRL A No. 174 / 2014, 02.07.2016, நன்றி ஐயா. Dhanesh Balamurugan

ஒரு கொலை வழக்கில் சம்மந்தப்பட்டதாக கைது செய்யப்பட்ட எதிரியால், காவல் ஆய்வாளர் அவர்களிடம் அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு எதிரிக்கு விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்து தீர்ப்பு கூறுவது சட்டப்படி செல்லாது.

ஏற்கனவே பிரிவு கவுன்சிலால் (Privy Council) வழங்கப்பட்ட "புன்னுக்குரி கோட்டையா Vs கிங் எம்பரர் (1947-AIR-PC-67)(1947-1-MLJ-219)" என்ற வழக்கில் எதிரிகளால் அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் எதிரிகளுக்கு தண்டனை வழங்கும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளைப் பற்றி கூறியுள்ளது.

காவல்துறையினரிடம் ஓர் எதிரி அளிக்கும் வாக்குமூலமானது இந்திய சாட்சிய சட்டம் பிரிவு, 27ல் கூறப்பட்டுள்ளவாறு ஒரு சங்கதியை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ள பகுதியை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். எனவே ஒரு எதிரி காவல்துறையினரிடம் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு தண்டனை வழங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

No comments:

Post a Comment