Thursday, May 25, 2017

5809 - இந்தியாவில் பொய் வரதட்சனை வழக்குகள் எப்படி உருவாக்கப்படுகிறது? Crl. M.C. 722 of 2009, 06.08.2010, New Delhi, Thanks to Mr. Adv Dhanesh Balamurugan


இந்தியாவில் பொய் வரதட்சணை வழக்குகள் எப்படிஉருவாக்கப்படுகின்றன என்ற உண்மையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் விளக்கமாக கூறியிருக்கிறது. அது எந்த அளவிற்கு உண்மை என்பதை இந்திய உச்ச நீதிமன்றமும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. சமீபத்திய நாளிதழ் செய்திகளும் அதை உண்மை என்று நிரூபித்திருக்கின்றன. தொடர்ந்து படியுங்கள்…

தினம் தினம் இந்திய நகர வீதிகளில்நடந்துகொண்டிருக்கும் பல கொடிய குற்றங்களில் பாதிக்கப்படுபவர்கள் தங்களுக்கு நீதி வேண்டி காவல் நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்க வந்தால் குற்றச்சம்பவம் நடந்தது தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்டு வரவில்லை அது வேறு காவல்நிலைய எல்லைக்குள் வருகிறது என்று கூறி புகாரை பதிவு செய்யாமல் எல்லைப்பிரச்சனையைக் (Jurisdiction) காரணம் காட்டி அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

ஆனால் பொய் வரதட்சணை வழக்குகள் என்று வரும்போது இந்திய நாட்டிற்குள் இல்லாமல் எல்லை கடந்து வேறு நாட்டில் குற்றம் நடந்ததாக புகார்தாரர் கூறினாலும் எந்தவித எல்லைப் பிரச்சனைப் பற்றியோ, தங்களது அதிகார வரம்பு பற்றியோ கொஞ்சமும் யோசிக்காமல் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சுறுசுறுப்பாக குற்றப்பத்திரிக்கையும் தயார் செய்துவிடுகிறார்கள் என்று டெல்லி உயர்நீதிமன்றம் வருத்தப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற பொய் வழக்குகளில் குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்படுபவர், புகார் கொடுப்பவர், குற்றச் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் இடம் இந்த மூன்றுமே இந்திய மண்ணிற்குள் இல்லாதபோது இதுபோன்ற வழக்குகளை இந்தியாவில் உள்ள காவல்துறை அதிகாரி எப்படி புலன்விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கிறார் என்பது உலக மகா அதிசயம் என்று டில்லி உயர்நீதிமன்றமே ஆச்சரியப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்திற்கே புரியாத இந்த அதிசயம் பொய் வழக்குகளில் சிக்கித் தவிக்கும் சராசரி இந்தியக் குடிமக்களுக்கு எப்படிப் புரியும்? இந்த ஆச்சரியம் இன்றும் தினந்தோறும் இந்தியாவில் பல பொய் வரதட்சணை வழக்குகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த உண்மையை டெல்லிஉயர்நீதிமன்றம் ஒரு பொய் வரதட்சணை வழக்கிற்கான முதல் தகவல் அறிக்கையை கசக்சி எறிந்து (FIR Quash)கூறிய தீர்ப்பில் வெளியிட்டுள்ளது. அந்த உண்மையின் ஒரு பகுதியைப்பாருங்கள்………



IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI
August 06, 2010; Crl. M.C. 722 of 2009
Amit Sharma ...Petitioner Versus State & Ors. ...Respondents
JUSTICE SHIV NARAYAN DHINGRA
1. The present petition under Section 482 Cr.P.C read with Article 227 of the Constitution of India has been preferred by the petitioner for quashing of FIR No.170 dated 15thAugust, 2008 registered at Police Station Kirti Nagar, West Delhi District, New Delhi.
2. The present FIR was registered at the behest of Smt. Kavita Gupta who a resident of USA and had come to Delhi perhaps only for registration of this FIR. A perusal of FIR reveals that Smt. Kavita Gupta was living in USA since 1993...
3. ... ... ... ... The case is being prosecuted by her father as her attorney. A perusal of this FIR would show that immediately after marriage, the parties moved to USA and thereafter all events as alleged by her are of USA. Even the allegations of her Istridhan being taken away by her father in law and mother in law is of USA and not of India. Allegations of cruelties and the attitude of her husband towards her are all of USA. It is not stated by her that she ever stayed with her in laws or husband from the time of marriage till filing of this complaint at Delhi. When the counsel for State was asked how this FIR was registered in Delhi, the response of the State counsel as given in the form of brief synopsis is that while in India, the complainant and accused cohabited at Delhi at Kirti Nagar, which is the matrimonial house of complainant and therefore there was jurisdiction of Delhi court. A perusal of FIR would show that nowhere the complainant had stated that cohabitation had ever taken place between the parties at Delhi or the parties ever lived at Delhi.
4. It is surprising that such FIRs are registered by the police whenneither complainant lives in Delhi nor the accused persons live in Delhi nor any part of alleged offence had taken place in Delhi. The alleged offence admittedly had taken place in USA. All the accused persons, as mentioned by the complainant, are living in USA. The complainant herself is living in USAand the father of complainant perhaps is living in Delhi and pursuing this complaint. I consider that registration of this FIR is a sordid story of working culture of Delhi police. It is this police which refuses to register FIRs in case of robberies, thefts and other heinous offences which take place on the roads of Delhi and when the complainant dare comes to police station for registration of FIR, he is made to run from one police station to another on the issue of jurisdiction itself, while the FIRs are registered when nothing happened in India and no investigation can be done by the police in India. Why such FIRs are registered is obvious.It seems registration of FIRs has been made a profitable business by some police officials. ... ...
இதுபோன்ற பொய்யான வழக்குகளை அப்பாவிகளுக்கெதிராக இந்தியக்காவல் நிலையங்களில் பதிவுசெய்வது எப்படி என்பதைப்பற்றியும் டெல்லி உயர்நீதிமன்றமும், இந்திய உச்ச நீதிமன்றமும் நன்றாகவே விளக்கியிருக்கின்றன: “சரியான நபரை சரியாக கவனித்தால்” (“you can get any false FIR registered, if you have right connections” – Delhi HC, Crl. M.C. 722 of 2009, Date of Order: August 06, 2010).
இந்தியாவில் எப்படிப்பட்ட பொய்யான புகாருக்கும் முதல் தகவல் அறிக்கையும், குற்றப்பத்திரிக்கையும் தயார் செய்ய முடியும் என்று நீதிமன்றங்கள் விளக்கியிருக்கின்றன. அதையும் தொடர்ந்து படித்துப் பாருங்கள்………
“Police is supposed to be professional in its working culture. The fall in standard of police has gone to such an extent that in genuine cases it is difficult to get a case registered and even if registered, it wont act with sinceritybut you can get any false FIR registered with it, if you have right connections.” - Hon. Justice S. N. Dhingra, Delhi High Court (Crl. M.C. 722 of 2009 Date of Order: August 06, 2010).
“Registration of FIRs in India: There are innumerable cases that where the complainant is a practical person, FIRs are registered immediately, copies thereof are made over to the complainant on the same day, investigation proceeds with supersonic jet speed, immediate steps are taken for apprehending the accused” - The Supreme Court of India in Lalita Kumari v Govt. of U.P. & Ors Writ Petition (Crl.) No.68 of 2008 decided on 14th July, 2008

இந்தியாவில் குற்றவழக்குகளில் சர்வசாதாரணமாக நடந்துகொண்டிருக்கும் இதுபோன்ற உலக மகா அதிசயங்களைக் கண்டு மாண்புமிக்க நீதிமன்றங்களே இப்படி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தால் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கித்தவிக்கும் அப்பாவிகளின் நிலை எப்படியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wd2VwendENlhzY1E/view?usp=sharing


No comments:

Post a Comment