Thursday, June 04, 2020

6266 - தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு - 11, நன்றி ஐயா. Dhanesh Balamurugan

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு - 11
மனுதாரர் மூன்றாம் நபர் ஒருவரின் தகவலை கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அனுப்புகிறார். அதனை பெற்றுக் கொண்ட பொதுத் தகவல் அலுவலர், மனுதாரர் கோரிய தவலானது மூன்றாம் நபர் சம்மந்தப்பட்டது என்று கூறி தகவல் அளிக்க மறுக்கிறார் என்றால் இது சட்ட விரோதமானது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு எதிரானது.
அப்படியானால் பொதுத் தகவல் அலுவலர் இந்த மாதிரியான நேர்வுகளில் என்ன செய்ய வேண்டும்?
மனுவை பெற்ற 5 தினங்களுக்குள் சம்மந்தப்பட்ட மூன்றாம் நபருக்கு ஆட்சேபனை உள்ளதா? என்று கேட்டு அறிவிப்பு அனுப்ப வேண்டும். அந்த அறிவிப்பை பெற்றுக் கொண்ட மூன்றாவது நபர் தனது ஆட்சேபனையை 10 நாட்களுக்குள் பொதுத் தகவல் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஆட்சேபனையை பெற்றுக் கொண்ட பொதுத் தகவல் அலுவலர் மூன்றாவது நபரின் ஆட்சேபனையை பரிசீலித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். முடிவில் மூன்றாவது நபர் ஆட்சேபனை தெரிவித்திருந்தாலும், அந்த தகவல் பொதுமக்களின் நலனுக்கு உகந்ததாக கருதினால் அந்த மூன்றாம் நபர் பற்றிய தகவல்களை மனுதாரருக்கு வழங்க வேண்டும். இந்த செயல்பாடுகள் அனைத்தும் மொத்தமாக 40 நாட்களுக்குள் நடக்க வேண்டும்.
இதனை செய்யாமல் பொதுத் தகவல் அலுவலர் வெறுமனே மூன்றாவது நபர் சம்மந்தப்பட்ட தகவல்களை வழங்க மறக்கக்கூடாது.
நமது மாநில தகவல் ஆணையம் இதுகுறித்து ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது.
வழக்கு எண் - 32845/விசாரணை /A/2014
Date - 11.6.2015

1 comment: