Wednesday, February 24, 2016

4987 - நீதிமன்ற அவமதிப்பு குற்றம் - நஷ்டயீடு வழக்கு, Cont. Petn. (MD) No. 231 of 2008, 06/06/2013, நன்றி ஐயா. Sampath Masilamani


சூழல் :
மனுதாரரின் கட்டிட்த்தை இடிக்க கட்டளையிட்ட ஆனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில், அந்த ஆனையை காரணம் கேட்கும் குறிப்பானையாககருதி, மனுதாரர் விளக்கம் அளிக்கும் படியும், அதை கருத்தில் கொண்டு அதிகாரிகள் மீண்டும் புதிய ஆனை பிறப்பிக்கும்படியும், அதுவரை கட்டிடத்தை இடிக்காமல் இருக்கவும் நீதிமன்றம் உத்திரவு அளிக்கின்றது. ஆனால் புதிய உத்திர்வு எதையும் பிறப்பிக்காமல், கட்டிட்த்தை அதிகாரிகள் இடித்ததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படுகிறது. அதிகாரிகள், தங்களுடைய வழக்கறிஞரிடமிருந்து தங்களுக்கு தகவல் எதுவும் வருமுன்னே இடித்ததாக வாதிடுகின்றனர்.
கேள்வி : வழக்கறிஞரிடமிருந்து தகவல் வருமுன்னே இடித்ததால் நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா ? நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தில் என்ன பரிகாரம் வழங்கலாம் ? பதில் : அதிகாரிகளின் வழக்கறிஞர் ஆஜரானபிறகு தீர்ப்பு ஏற்பட்ட்தால், வழக்கறிஞரிடமிருந்து தகவல் வருமுன்னே இடித்தோம் என்றாலும் நீதிமன்ற அவமதிப்பு ஆகும். நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தில் நஷ்டயீடும் வழங்கலாம் என முடிவு செய்து, ரூ. 3,50,000/- வழங்கப்படுகிறது. குறிப்பு :
G. Subbammal –Vs- Mr. Ramanai, Commissioner, Karur Municipality – Cont. Petn. (MD) No. 231 of 2008 – Hon’ble Mr. Justice N. Paul Vasanthakumar & Hon’ble Mr. Justice P. Devadas – Order dated 06/06/2013

No comments:

Post a Comment