Saturday, April 01, 2017

5734 - பொது சந்து குறித்த வழக்கு தீர்ப்பு, அசல் வழக்கு எண்:225-2010, 22.12.2015, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம். துறையூர், நன்றி ஐயா. Dhanesh Balamurugan

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம். துறையூர்
முன்னிலை: திரு. ஜி. பிரபாகரன். பி.ஏ..பி.எல்..
மாவட்ட உரிமையியல் நீதிபதி
2015-ம் ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 22-ம் நாள் செவ்வாய்க்கிழமை
அசல் வழக்கு எண்:225-2010
பொம்மாயி ... வாதி
-எதிர்-
காமாட்சி ... பிரதிவாதி
வாதியால் இவ்வழக்கானது¸ வழக்குரை கூரைவாரிச்சந்து வாதிக்கும்¸ பிரதிவாதிக்கும் பாத்தியப்பட்ட பொதுவான கூரைவாரிச்சந்து என்று விளம்புகை பரிகாரம் கோரியும்¸ அதன் காரணபரிகார்த்தமாக வழக்குரை கூரைவாரிச்சந்தில் வாதி சென்று வருவதற்கோ¸ வாதி தன் கீழ்;புற சுவற்றை பூசுவதற்கோ¸ பழுதுபார்ப்பதற்கோ பிரதிவாதியோ அல்லது அவரது வகையாட்களோ எவ்விதமான இடையூறும் செய்யக்கூடாது என்று நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரியும்¸ மாற்று பரிகாரமாக வழக்குரை கூரைவாரிச்சந்தில் வசதியுரிமை சட்டப்படி வாதி தன் வீட்ழன் கீழ்புற சுவற்றை பூசவும்¸ பழுதுபார்க்கவும் உரிமை உண்டு என்று விளம்புகை பரிகாரம் கோரியும்¸ அதன் காரணபரிகார்த்தமாக நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரியும் மற்றும் செலவுத்தொகை கோரியும் பிரதிவாதி மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2. வழக்குரைச்சுருக்கம்.
வழக்குரையோடு ஓர் உத்தேச வரைபடம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதை இவ்வழக்குரையின் ஓர் அங்கமாக பாவித்துக்கொள்ளும்படி வேண்டப்படுகிறது. வாதியின் உடன்பிறந்த இளைய சகோதரி தான் பிரதிவாதி. வாதியும்¸ பிரதிவாதியும் கடந்த 20.03.1973-ம் தேதியில் தாதன் முத்துராஜா என்பவரிடமிருந்து கோட்டப்பாளையம் கிராம சர்வே எண்.331/13பி-ல் கட்டுப்பட்ட 5 செண்டு நிலத்தில் மேல்புறமுள்ள 1½ செண்டு நிலத்தை வாதியும்¸ கீழ்புறமுள்ள 1½ செண்டு நிலத்தை பிரதிவாதியும் கிரையம் பெற்றிருக்கிறார்கள். மீதியுள்ள இரண்டு செண்டு நிலத்தை கோட்டப்பாளையம் கிராம கூட்டுறவு விவசாய கடன் சங்கம் கிரையம் பெற்றிருக்கிறது. அதில் வாதி கிரையம் பெற்ற இடம் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் சர்வே எண்.138-13பி2 என்று உட்பிரிவு செய்யப்பட்டுள்ளது. வாதி தான் கிரையம் பெற்ற இடத்தில் ஓர் கூரை வீடு கட்டி குடியிருந்து வந்துள்ளார். பிரதிவாதி தான் கிரையம் பெற்ற இடத்தில் வீடு கட்டும்பொழுது மேற்படி கூட்டுறவு சங்கத்தின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடுகட்ட முயற்சி செய்ததால் மேற்படி கூட்டுறவு சங்கம் வாதியையும்¸ பிரதிவாதியையும் மற்றும் சில பஞ்சாயத்தார்களையும் கூப்பிட்டு இடத்தை அளந்து பார்த்தபொழுது சர்வே எண்.131/13பி-ல் மொத்தம் 4 ¾ செண்டு நிலம் மட்டுமே இருந்துள்ளது. அப்பொழுது கூட்டுறவு சங்கம் வாதி¸ பிரதிவாதி வாங்கிய இடத்திற்கு வடபுறமும். மேல்புறமும் உள்ள பாதையை தன்னுடையது என்று சொன்னது. அதை எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள். அத்தோடு வாதி. பிரதிவாதி இடத்திற்கும் இடையே இரண்டு அடி கூரைவாரிச்சந்து ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வாய்கறாராக பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வாதி தன்னுடைய கூரை வீட்டை இடித்துவிட்டு தன்னுடைய இடத்தில் கீழ்புறம் ஓர் அடி இடம் கூரைவாரிக்காக விட்டுவிட்டு 1994-ம் ஆண்டில் அஸ்திவாரம் கட்டி முடித்து. 1995-ம் ஆண்டிலிருந்து மச்சு கட்டிடம் கட்ட ஆரம்பித்தார். அதேபோல். பிரதிவாதியும் தன் இடத்தில் மேல்புறத்தில் ஓர் அடி இடம் கூரைவாரிக்காக விட்டுவிட்டு மீதி இடத்தில் வீடு கட்டியுள்ளார். வாதி 1996-ம் ஆண்டில் கட்டிடம் கட்டி முடித்துவிட்டு கீழ்புற சுவற்றில் முதலாவது மாடியில் ஓர் ஜன்னல் அமைத்து அதற்கு 3/4 அடி நிழற்கூரை அமைக்க முற்பட்டபோது. அதை பிரதிவாதி கடந்த 19.01.1996-ம் தேதியில் தடை செய்ததால் வாதி. பிரதிவாதியின் மீதும். பிரதிவாதியின் மகன் மீதும் இந்நீதிமன்றத்தில் அ.வ.எண்.44-1996 என்ற எண்ணில் நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரி ஓர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேற்படி வழக்கில் பிரதிவாதிகள் தாக்கல் செய்த எதிர்வழக்குரையிலும். வாதி மீது இந்தநிர் பிரதிவாதி தாக்கல் செய்திருந்த அசல் வழக்கு எண்.187-1996 என்ற வழக்கிலும்¸ வாதிக்கு அவருடைய கீழ்புற சுவற்றுக்கும் கீழ்புறத்தில் 3/4 அடி இடம் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டுள்ளார்கள். தற்பொழுது அதை பிரதிவாதி மறுப்பதற்கு முரண்தடையால் தடைபடுகிறார். வாதி தாக்கல் செய்திருந்த அ.வ.எண்.44-96 வழக்கானது கடந்த 31.03.2003-ம் தேதி இந்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அதன்பேரில் வாதி மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளார். மேற்படி மேல்முறையீடும் கடந்த 11.07.2006-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில். வாதி தன் வீட்டு கீழ்புற சுவற்றின் கிழக்குப்புறத்தை சிமெண்ட் பூச்சு பூசி¸ வெள்ளை அடிக்க முயற்சி செய்ததை பிரதிவாதி தடுத்துள்ளார். அவ்வாறு தடுப்பதற்கு பிரதிவாதிக்கு எவ்விதமான
உரிமையும் இல்லை. வாதி முன்பு நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் மட்டும் கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். தற்பொழுது விளம்புகை பரிகாரம் கோரியும். நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரியும் இவ்வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். ஆதனால் இவ்வழக்கு முன் தீர்ப்பு தடையினாலோ. சி.பி.சி.கட்டளை 2. விதி 2-ன் படியோ தடைபடவில்லை என்றும் கூறி மேலே கூறிய பரிகாரம் கோரி இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3. எதிர்வழக்குரை மற்றும் கூடுதல் எதிர்வழக்குரைச்சுருக்கம்.
வாதி தன் வழக்குரையில். வாதியும். பிரதிவாதியும் சகோதரிகள் என்றும். வுhதியும். பிரதிவாதியும் தாதன் முத்துராஜாவிடமிருந்து கடந்த 20.03.1973-ம் தேதி தலா 1½ செண்டு நிலம் கிரையம் பெற்றிருக்கிறார்கள் என்றும் சொல்லியுள்ள சங்கதிகள் உண்மை என்று ஒப்புக்கொள்ளப்படுகிறது. வாதி இந்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த அ.வ.எண்.44-1996-ல் வாதி வீட்ழற்கும். பிரதிவாதி வீட்ழற்கும் இடையே உள்ள சந்து இவ்வழக்கில் கூறியுள்ளதுபோல் கூரைவாரி பொதுச்சந்து என்றும். அதில் ஜன்னலுக்கு நிழற்கூரை அமைப்பதற்கு வாதிக்கு உரிமை உண்டு என்றும். அதனை பிரதிவாதி தடுக்கக்கூடாது என்றும் கூறி நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரியிருந்தார். அப்பொழுதும் வாதியின் கீழ்புற சுவர் பூசப்படாமல் இருந்தது. மேற்படி வழக்கு இந்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அதன் பேரில் வாதி தாக்கல் செய்திருந்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அதனால். வாதியின் இவ்வழக்கு முன் தீர்ப்புத்தடை என்னும் தோசத்திற்கு ஆட்படுகிறது. அத்தோடு வாதி ஏற்கனவே தாக்கல் செய்திருந்த வழக்கில். தற்பொழுது இவ்வழக்கில் கோரியுள்ள பரிகாரங்களை கோரியிருக்க வேண்டும். அவ்வாறு வாதி இவ்வழக்கில் கோரியுள்ள உரிமையை முந்தைய வழக்கில் கோராததால் வாதியின் இவ்வழக்கு சிபிசி கட்டளை 2. விதி 2-ன்படி நிலைநிற்கத்தக்கதல்ல. பிரதிவாதி அ.வ.எண்.187-1996-ல் தவறான சங்கதிகளை கூறி வழக்கு தாக்கல் செய்ததாலேயே அதை பிரதிவாதி வாபஸ் பெற்றுக்கொண்டுவிட்டார். மேற்படி தவறான சங்கதிகளை வாதி இவ்வழக்கிற்கு அனுசரணையாக கூறியிருப்பது சட்டப்படி ஏற்புடையதல்ல. கடந்த 1996-ம் ஆண்டு முதல் வழக்குரைச்சொத்தை பொருத்து வாதி உரிமை கொண்டாடியும். அதனை பிரதிவாதி தௌளதெளிவாக மறுத்து வந்துள்ள சூழ்நிலையிலும். பூசல் ஏற்பட்டு 15 வருடங்கள் கழித்து இவ்வழக்கு தாக்கல் செய்திருப்பதால் வாதியின் இவ்வழக்கானது காலாவதி தோசத்திற்கு ஆட்படுகிறது. வாதி தன் வசம் 680 சதுரடி அளவுள்ள இடத்தை வைத்திருக்கிறார். அதாவது வாதி கிரையம் பெற்ற 1 ½ செண்டு நிலத்திற்கும் கூடுதலாகவே இடம் வைத்துள்ளார். வாதி தான் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த வழக்கில் தன் வீட்டிற்கு வடபுறமும். மேல்புறமும் 1 ½ அடி இடம் கூரைவாரிக்காக விட்டுள்ளதாக சாட்சியம் அளித்துள்ளார். வாதி. கடந்த 1996-ம் ஆண்டு கட்டிடம் கட்ட ஆரம்பித்தபொழுது தன்னுடைய சொத்திற்கு கீழ்புறத்தில் கூரைவாரிக்காக இடம் விடாமல் கட்டிடம் கட்ட முயற்சி செய்ததால் பிரதிவாதி தகராறு செய்துள்ளார். அப்பொழுது வாதி தன்னுடைய வீட்டு கீழ்புற சுவற்றுக்கு கிழக்கே தனக்கு எவ்வித பாத்தியமும் இல்லை என்றும். வெளிச்சத்திற்கு மட்டும் ஜன்னல் வைத்துக்கொள்வதாக கூறி நிழற்கூரை வைக்காமல் கீழ்புறம் தரைபகுதியில் கெட்டிமெத்தை கட்டிடம் கட்டிவிட்டு. முதல்மாடியில் கட்டிடம் கட்டும்பொழுது கீழ்புற சுவரில் ஜன்னல் வைத்து நிழற்கூரை வைக்க முயற்சி செய்தார். அதை பிரதிவாதி தடுத்துவிட்டார். பிரதிவாதி தான் தன் இடத்தில் இரண்டு அடி இடம் போட்டு கட்டிடம் கட்டியுள்ளார். அதனால். வாதியின் இவ்வழக்கானது பிரதிவாதியின் நஷ்ட ஈட்டு செலவுத்தொகையுடன் தள்ளுபடி செய்யப்படவேண்டும்.
4. மேற்கூறிய வழக்குரை. எதிர்வழக்குரை. கூடுதல் எதிர்வழக்குரை மற்றும் ஆவணங்களில் இருந்து இவ்வழக்கில் தீர்வுக்காக பின்வரும் எழுவினாக்கள் வனையப்பட்டுள்ளன.
1) வழக்குரை கூரைவாரிச்சந்து வாதி. பிரதிவாதி இருவருக்கும் பாத்தியப்பட்ட சந்தா?
2) வாதியின் இவ்வழக்கானது சிபிசி கட்டளை 2. விதி 2-ன் படி பாழ்படுகிறதா?
3) வாதியின் இவ்வழக்கானது முன்தீர்ப்பு தடை என்னும் தோசத்திற்கு ஆட்படுகிறதா?
4) வாதியின் முதல் பரிகாரம் காலாவதி தோசத்திற்கு ஆட்படுகிறதா?
5) வாதி விளம்புகை மற்றும் நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் பெற அருகரா?
6) வழக்குரைச்சந்தில் வாதிக்கு புழக்க உரிமையுள்ளதா?
7) வாதி கோரியுள்ள மாற்று பரிகாரமான விளம்புகை மற்றும் நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் பெற வாதி அருகரா?
8) வாதிக்கு கிடைக்கக்கூடிய வேறு பரிகாரங்கள் என்ன?
5. மேற்கூறிய எழுவினாக்களிலிருந்து முதலில் தன் வழக்கை நிரூபிக்கும் பொறுப்பு வாதிக்குத்தான் இருக்கிறது. அதனழப்படையில் சாட்சி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் வாதி தரப்பில் மூன்று சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டும். வா.சா.ஆ.1 முதல் 6 சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது. பிரதிவாதி தரப்பில் ஒரு சாட்சி விசாரணை செய்யப்பட்டு. பி.வா.சா.ஆ.1 முதல் பி.வா.சா.ஆ.7 வரையிலான ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது.
6. எழு வினா 1.
வாதி தரப்பில் ஆஜரான கற்றறிந்த வழக்கறிஞர் அவர்கள். வாதியும். பிரதிவாதியும் கடந்த 20.03.1973-ம் தேதியில் தாதன் முத்துராஜா என்பவரிடமிருந்து கோட்டப்பாளையம் கிராம சர்வே எண்.331-13பி-ல் கட்டுப்பட்ட 5 செண்டு நிலத்தில் மேல்புறமுள்ள 1 ½ செண்டு நிலத்தை வாதியும். கீழ்புறமுள்ள 1 ½ செண்டு நிலத்தை பிரதிவாதியும் கிரையம் பெற்றிருக்கிறார்கள் என்றும். மீதியுள்ள இரண்டு செண்டு நிலத்தை கோட்டப்பாளையம் கிராம கூட்டுறவு விவசாய கடன் சங்கம் கிரையம் பெற்றிருக்கிறது என்றும். வாதி தான் கிரையம் பெற்ற இடத்தில் ஓர் கூரை வீடு கட்டி குடியிருந்து வந்துள்ளார் என்றும். பிரதிவாதி தான் கிரையம் பெற்ற இடத்தில் வீடு கட்டும்பொழுது மேற்படி கூட்டுறவு சங்கத்தின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடுகட்ட முயற்சி செய்ததால் மேற்படி கூட்டுறவு சங்கம் வாதியையும். பிரதிவாதியையும் மற்றும் சில பஞ்சாயத்தார்களையும் கூப்பிட்டு இடத்தை அளந்து பார்த்தபொழுது சர்வே எண்.131/13பி-ல் மொத்தம் 4 4/3 செண்டு நிலம் மட்டுமே இருந்துள்ளது என்றும். அப்பொழுது வாதி. பிரதிவாதி இடத்திற்கும் இடையே இரண்டு அடி கூரைவாரிச்சந்து ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வாய்கறாராக பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும். அதன்படி வாதி தன்னுடைய கூரை வீட்டை இடித்துவிட்டு தன்னுடைய இடத்தில் கீழ்புறம் ஓர் அடி இடம் கூரைவாரிக்காக விட்டுவிட்டு 1995-ம் ஆண்டிலிருந்து மச்சு கட்டிடம் கட்ட ஆரம்பித்தார் என்றும். அதேபோல். பிரதிவாதியும் தன் இடத்தில் மேல்புறத்தில் ஓர் அடி இடம் கூரைவாரிக்காக விட்டுவிட்டு மீதி இடத்தில் வீடு கட்டியுள்ளார் என்றும். வாதி 1996-ம் ஆண்ழல் கட்டிடம் கட்டி முடித்துவிட்டு கீழ்புற சுவற்றில் முதலாவது மாடியில் ஓர் ஜன்னல் அமைத்து அதற்கு 3/4 அடி நிழற்கூரை அமைக்க முற்பட்டபோது. அதை பிரதிவாதி கடந்த 19.01.1996-ம் தேதியில் தடை செய்ததால் வாதி. பிரதிவாதியின் மீதும். பிரதிவாதியின் மகன் மீதும் இந்நீதிமன்றத்தில் அ.வ.எண்.44-1996 என்ற எண்ணில் நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரி ஓர் வழக்கு தாக்கல் செய்துள்ளார் என்றும். மேற்படி வழக்கில் பிரதிவாதிகள் தாக்கல் செய்த எதிர்வழக்குரையிலும். வாதி மீது இந்தநிர் பிரதிவாதி தாக்கல் செய்திருந்த அசல் வழக்கு எண்.187/1996 என்ற வழக்கிலும். வாதிக்கு அவருடைய கீழ்புற சுவற்றுக்கும் கீழ்புறத்தில் 3/4 அடி இடம் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டுவிட்டு. தற்பொழுது அதை பிரதிவாதி மறுப்பதற்கு முரண்தடையால் தடைபடுகிறார் என்றும். இந்நிலையில். வாதி தன் வீட்டு கீழ்புற சுவற்றின் கிழக்குப்புறத்தை சிமெண்ட் பூச்சு பூசி. வெள்ளை அடிக்க முயற்சி செய்ததை பிரதிவாதி தடுத்துள்ளார் என்றும். அதற்கு பிரதிவாதிக்கு எவ்விதமான உரிமையும் இல்லை என்றும். வாதி முன்பு நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார் என்றும். தற்பொழுது விளம்புகை பரிகாரம் கோரியும். நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரியும் இவ்வழக்கை தாக்கல் செய்திருக்கிறார் என்றும். அதனால். இவ்வழக்கு முன் தீர்ப்பு தடையினாலோ. சி.பி.சி.கட்டளை 2. விதி 2-ன் படியோ தடைபடவில்லை என்றும் வாதிட்டு தமது வாதத்திற்கு ஆதரவாக எழுத்துப்பூர்வமான விவாதவுரையையும் தாக்கல் செய்து
1. ILR 1988(3) KAR 2102 D.B.
2. AIR 1995AP-17
3. AIR 1992 Del.225
4. S.A. No. 707/2006-ல் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்புவித்த முன்னோடி தீர்ப்புரைகளையும் சமர்ப்பித்து வாதியின் வழக்கினை அனுமதிக்குமாறு வேண்டினார்.
7. மாறாக. பிரதிவாதி தரப்பில் ஆஜரான கற்றறிந்த வழக்கறிஞர் அவர்கள். வாதியும். பிரதிவாதியும் கடந்த 20.03.1973-ம் தேதி தலா 1 ½ செண்டு நிலம் கிரையம் பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மை என்றும். வாதி இந்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த அ.வ.எண்.44-1996-ல் வாதி வீட்டிற்கும். பிரதிவாதி வீட்டிற்கும் இடையே உள்ள சந்து கூரைவாரி பொதுச்சந்து என்றும். அதில் ஜன்னலுக்கு நிழற்கூரை அமைப்பதற்கு வாதிக்கு உரிமை உண்டு என்றும். அதனை பிரதிவாதி தடுக்கக்கூடாது என்றும் கூறி நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரியிருந்தார் என்றும். அப்பொழுதும் வாதியின் கீழ்புற சுவர் பூசப்படாமல் இருந்தது என்றும். மேற்படி வழக்கு இந்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்றும். அதன் பேரில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்றும் வாதி ஏற்கனவே தாக்கல் செய்திருந்த வழக்கில் தற்பொழுது இவ்வழக்கில் கோரியுள்ள பரிகாரங்களை கோருவதற்கு உரிமை இருந்தது என்றும் மேற்படி உரிமையை முந்தைய வழக்கிலேயே வாதி கோரி இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு வாதி இவ்வழக்கில் கோரியுள்ள உரிமையை முந்தைய வழக்கில் கோராததால் வாதியின் இவ்வழக்கு சிபிசி கட்டளை 2. விதி 2-ன்படியும். சி.பி.சி. பிரிவு 11-ன்படியும் நிலைநிற்கத்தக்கதல்ல என்றும் பிரதிவாதி அ.வ.எண்.187-1996-ல் தவறான சங்கதிகளை கூறி வழக்கு தாக்கல் செய்ததாலேயே அதை பிரதிவாதி வாபஸ் பெற்றுக்கொண்டுவிட்டார் என்றும் அதனால் அதில் இவ்வழக்கு பிரதிவாதி கொடுத்திருந்த அட்மிஷனை வாதி இவ்வழக்கிற்கு அனுசரணையாக எடுத்துக்கொள்ளமுடியாது என்றும் கடந்த 1996-ம் ஆண்டு முதல் வழக்குரைச்சொத்தில் உள்ள வாதியின் உரிமையை பிரதிவாதி மறுத்து வந்துள்ள சூழ்நிலையில். வாதியின் இவ்வழக்கும் காலாவதி தோசத்திற்கு ஆட்படுகிறது என்றும் வாதி தன் வசம் 680 சதுரடி அளவுள்ள இடத்தை வைத்திருக்கிறார் என்றும் வாதிட்டு தமது வாதத்திற்கு ஆதரவாக ஏ.ஐ.ஆர்.1994 எஸ்.சி.152. சி.ஏ.எண்.7184 மற்றும் 7185-2001-ல் மாண்புமிகு உச்சநீதிமன்றம் பிறப்புவித்த தீர்ப்புரையை சமர்ப்பித்து வாதியின் வழக்கினை தள்ளுபடி செய்யுமாறு வேண்டினார்.
8. வாதி தன் வழக்கினை நிருபித்திருக்கிறாரா என்பது குறித்து பார்க்கும்பொழுது வாதி தம்மை வா.சா.1 ஆக விசாரணை செய்துகொண்டுள்ளார். வா.சா.1 தன் வழக்குரையில் கண்டுள்ள சங்கதிகளை அனுசரித்தே தன் முதல் விசாரணை வாக்குமூலத்தை தாக்கல் செய்திருக்கிறார். வா.சா.ஆ.3. 4 கடந்த 20.03.1973-ம் தேதிய பதிவு கிரையப்பத்திரங்களின் பதிவு நகல்களை உற்று நோக்கும்பொழுது அவைகள் மூலம் வாதியும். பிரதிவாதியும் தலா 1 ½ செண்ட் நிலத்தை கிரையம் பெற்றிருக்கிறார்கள் என்று அறியமுடிகிறது. அத்தோடு. வா.சா.ஆ.3.4 பதிவு கிரையப்பத்திரங்கள் உபயதரப்பினர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். வாதி தன் வீட்டின் கிழக்குபுறச்சுவற்றிற்கு கிழக்குப்புறம் கூரைவாரிக்காக ஓர் அடி இடம் விட்டிருக்கிறாரா என்பது குறித்து பி.வா.சா.ஆ.6-ஐ உற்றுநோக்கும்பொழுது அது அசல் வழக்கு எண்.187-1996-ல் ஆணையர் தாக்கல் செய்த வரைபடம் என்று அறியமுடிகிறது. மேற்படி வரைபடம் வாதி மற்றும் பிரதிவாதியால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். மேற்படி வரைபடத்தில் கண்ட வாதி இவ்வழக்கு பிரதிவாதியாவார். மேற்படி வரைபடத்தில் கண்ட பிரதிவாதி இவ்வழக்கு வாதியாவார். மேற்படி வரைபடத்தில் இவ்வழக்கு வாதியின் வீடு தென்வடல் சராசரியாக 30 அடி 4 அங்குலம் என்றும். கிழமேல் இருபுறமும் 20 அடி என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில். இவ்வழக்கு வாதியின் வசம் 608 சதுரடி இடம் இருக்கிறது என்று அறியமுடிகிறது. அதேபோல். மேற்படி வரைபடத்தில் இவ்வழக்கு பிரதிவாதியின் வீடு தென்வடல் சராசரியாக 30 அடி 6 அங்குலம் என்றும். கிழமேல் சராசரியாக 20 அடி 9 ½ அங்குலம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில். இவ்வழக்கு பிரதிவாதியின் வசம் 641.07 சதுரடி இடம் இருக்கிறது என்று அறியமுடிகிறது. 1 ½ செண்டு என்பது 654 சதுரடி ஆகும். வாதி தன் வீட்டிற்கு மேற்கிலும். வடக்கிலும் 1 ½ அடி அளவுள்ள இடம் விட்டிருப்பதாக வாதி தன் முந்தைய வழக்கிலேயே குறுக்கு விசாரணையில் ஒப்புக்கொண்டிருப்பதாக பிரதிவாதி சொல்லியிருந்தபோதிலும் இது சம்மந்தமாக மேற்படி குறுக்கு விசாரணையின் சான்றிட்ட நகலினை பிரதிவாதி பெற்று இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்னும் சூழ்நிலையில் அது இந்நீதிமன்றத்தால் கருத்தில்கொள்ளப்படவில்லை. பிரதிவாதி சொல்வது போல் பிரதிவாதி தான் கிரையம் பெற்ற இடத்தில் தன் வீட்டிற்கு மேற்கே 2 அடி அளவுள்ள இடம் விட்டிருந்தால் அதன் விஸ்தீரணம் 30.6 அங்குலம் x 2 ஸ்ரீ 61.2 அங்குலம் வருகிறது. ஆக 61.2 + 641.07 = 702.27 அங்குலம் அளவுள்ள இடம் வருகிறது. ஆக 702.27 - 654 = 48.27 சதுரடி அளவுள்ள இடம் பிரதிவாதிக்கு கூடுதலாக வருகிறது என்று அறிய முடிகிறது. மேலும் பிரதிவாதியே அ.வ.எண். 44-1996-ல் தாக்கல் செய்திருக்கிற எதிர்வழக்குரை மற்றும் அ.வ.எண்.187-1996-ல் தாக்கல் செய்திருக்கிற வா.சா.ஆ.6 வழக்குரையிலும் இவ்வழக்கு வாதி தன்னுடைய கீழ்புற சுவற்றிற்கு கீழ்புறம் 9 அங்குலம் அளவில் இடம் விட்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 58-ன்படி **Admitted fact need not to be proved.” என்பதன் அடிப்படையிலும். “Admission
is the best evidence” என்பதன் அடிப்படையிலும். இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 115-ன் படியும். வழக்குரை கூரைவாரிச்சந்து வாதிக்கும். பிரதிவாதிக்கும் பாத்தியப்பட்ட பொது கூரைவாரிச்சந்து என்பதை வாதி நிரூபித்திருக்கிறார் என்று இந்நீதிமன்றம் முடிவு செய்து அவ்வாறே இந்த எழுவினா வாதிக்கு ஆதரவாக தீர்வு காணப்படுகிறது.
9. எழுவினாக்கள் 2.3.
வாதியின் இவ்வழக்கானது சி.பி.சி. கட்டளை 2. விதி 2 மற்றும் சி.பி.சி. பிரிவு 11- ன்படி பாழ்படுகிறதா என்பது குறித்து பி.வா.சா.ஆ.1 அ.வ.எண்.44-1996 சம்மந்தப்பட்ட வழக்குரையின் சான்றிட்ட நகலை உற்றுநோக்கும்பொழுது அது இவ்வழக்கு வாதி வீட்ழன் கீழ்புற தென்வடல் சுவற்றில் வாதி ஜன்னல் அமைத்து அதன்மேல் 3-4 அடி நிழற்கூரை அமைத்து தன் சுவாதீன அனுபவத்தில் வைத்து அனுபவித்து வருவதை பிரதிவாதியோ. அவரது வகையாட்களோ இடையூறு செய்யக்கூடாது என்று நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரி தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று அறிய முடிகிறது. வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ள வாதி தன் குறுக்கு விசாரணையில். "நான் முந்தைய வழக்கை தாக்கல் செய்ததற்கான காரணம் என் வீட்டின் கிழக்குப்பக்க சுவற்றின் கிழக்குபுறத்தை பிரதிவாதி சிமெண்ட் பூச்சு பூசவிடமாட்டேன் என்று சொல்வது தான் என்றும். கடந்த 25 வருடங்களாகவே அந்த சுவற்றை பிரதிவாதி பூசவிடாமல் செய்கிறார் என்றும். தற்பொழுது நான் இவ்வழக்கினை சிமெண்ட் பூச்சு பூசவேண்டும் என்பதற்காக தான் தாக்கல் செய்திருக்கிறேன்." என்றும் சாட்சியம் அளித்திருக்கிறார். மேற்படி சாட்சியத்திலிருந்து வழக்குரை கூரைவாரிச்சந்தின் வழியாக வாதி சென்று தன் வீட்டு கீழ்புற சுவற்றின் கிழக்குப்புறத்தில் சிமெண்ட் பூச்சு பூசுவதை இடையூறு செய்திருக்கிறார் என்று அறிய முடிகிறது. சி.பி.சி. கட்டளை 2. விதி 2-ல். Suit to include the whole claim:
1. Every suit shall include the whole of the claim which the plaintiff is entitled to make in respect of the cause of action but a plaintiff may relinquish any portion of his claim in order to bring the suit within the jurisdiction of any court.
2. Relinquishment of part of claim : Where a plaintiff omits to sue in respect of, or intentionally relinquishes, any portion of his claim, he shall not afterwards sue in respect of the portion so omitted or relinquished.
3. Omission to sue for one of several reliefs: A person entitled to more than one relief in respect of the same cause of action may sue for all or any of such reliefs, but if he omits, except with the leave of the Court, to sue for all such reliefs, he shall not afterwards sue for any relief so omitted.
என்று சொல்லப்பட்டுள்ளது. வாதி ஏற்கனவே இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அ.வ.எண்.44-1996-ல். இவ்வழக்கில் கோரியுள்ள பரிகாரங்களை கோரியிருக்க வேண்டும். அவ்வாறு கோராததால் தான் மேற்படி வழக்கானது மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடியும் செய்யப்பட்டிருக்கிறது என்னும் சூழ்நிலையில். வாதியின் இவ்வழக்கானது சி.பி.சி. கட்டளை 2. விதி 2-ன்கீழ் பாழ்படுகிறது என்று இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது. அடுத்தபடியாக. வாதியின் இவ்வழக்கானது முன்தீர்ப்பு தடை என்னும் தோசத்திற்கு ஆட்படுகிறதா என்பது குறித்து சி.பி.சி. பிரிவு 11-ஐ உற்றுநொக்கும்பொழுது.
11.Res Judicata.- No Court shall try any suit or issue in which the matter directly and substantially in issue has been directly and substantially in issue in a former suit between the same parties, or between parties under whom they or any of them claim, litigating under the same title, in a Court competent to try such subsequent suit or the suit in which such issue has been sub-sequently raised, and has been heard and finally decided by such Court.”
என்று சொல்லப்பட்டுள்ளது. பி.வா.சா.ஆ.1 அ.வ.எண்.44-1996 சம்மந்தப்பட்ட வழக்குரையின் சான்றிட்ட நகலை உற்றுநோக்கும்பொழுது அது இவ்வழக்கு வாதி வீட்ழன் கீழ்புற தென்வடல் சுவற்றில் வாதி ஜன்னல் அமைத்து அதன்மேல் 3-4 அடி நிழற்கூரை அமைத்து தன் சுவாதீன அனுபவத்தில் வைத்து அனுபவித்து வருவதை பிரதிவாதியோ. அவரது வகையாட்களோ இடையூறு செய்யக்கூடாது என்று நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரி தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று அறிய முடிகிறது. வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ள வாதி தன் குறுக்கு விசாரணையில். "நான் முந்தைய வழக்கை தாக்கல் செய்ததற்கான காரணம் என் வீட்டின் கிழக்குப்பக்க சுவற்றின் கிழக்குபுறத்தை பிரதிவாதி சிமெண்ட் பூச்சு பூசவிடமாட்டேன் என்று சொல்வது தான் என்றும். கடந்த 25 வருடங்களாகவே அந்த சுவற்றை பிரதிவாதி பூசவிடாமல் செய்கிறார் என்றும். தற்பொழுது நான் இவ்வழக்கினை சிமெண்ட் பூச்சு பூசவேண்டும் என்பதற்காக தான் தாக்கல் செய்திருக்கிறென்." என்றும் சாட்சியம் அளித்திருக்கிறார். மேற்படி வழக்கிலேயெ வாதி இவ்வழக்கில் கோரியுள்ளதுபோல் விளம்புகை பரிகாரம் கோராததால் மேற்படி வழக்கு பிரச்சனையும். இவ்வழக்கு பிரச்சனையும் இந்நீதிமன்றத்தாலும். மேல்முறையீட்டு நீதிமன்றத்தாலும் இறுதியாக தீர்வு காணப்பட்டிருக்கிறது. இந்த எழுவினா சம்மந்தமாக வாதி குறிப்பிட்டிருக்கக்கூடிய
1. ILR 1988(3) KAR 2102 D.B.
2. AIR 1995AP-17
3. AIR 1992 Del.225
4. S.A. No. 707/2006 மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்புவித்த முன்னோடி தீர்ப்புரைகள் இவ்வழக்கு சூழ்நிலைகளோடு பொருந்திவரவில்லை. மாறாக. பிரதிவாதி தாக்கல் செய்த 1994 ஏ.ஐ.ஆர். 152 எஸ்.சி. என்னும்தீர்ப்புரையில் மாண்புமிகு உச்சநீதிமன்றம்
“We find no force in the contention. It is settled law that in a suit for injunction when title is in issue for the purpose of granting injunction, the issue directly and substantially arises in that suit between the parties. When the same issue is put in issue in a later suit based on title between the same parties or their privies in a subsequent suit the decree in the injunction suit equally operates as res judicata.” என்று சொல்லியுள்ளது இவ்வழக்கிற்கு பொருந்தி வருகிறது என்று இந்நீதிமன்றம் முடிவு செய்து அவ்வாறே இந்த எழுவினாக்கள் வாதிக்கு எதிராக இந்நீதிமன்றத்தால் தீர்வு காணப்படுகிறது.
10. எழுவினா 4.
வாதியின் இவ்வழக்கானது காலாவதி தோசத்திற்கு ஆட்படுகிறதா என்பது குறித்து பார்க்கும்பொழுது. கடந்த 1996-ம் ஆண்டு முதல் வழக்குரைச்சொத்தை பொருத்து வாதி உரிமை கொண்டாடியும். அதனை பிரதிவாதி தௌளதெளிவாக மறுத்து வந்துள்ள சூழ்நிலையிலும். பூசல் ஏற்பட்டு 15 வருடங்கள் கழித்து வாதி இவ்வழக்கை விளம்புகை பரிகாரம் கோரி தாக்கல் செய்திருப்பதால் வாதியின் இவ்வழக்கானது காலாவதி தோசத்திற்கு ஆட்படுகிறது என்று பிரதிவாதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து காலவரையறை சட்டம் ஆர்ட்டிக்கல் 58-ஐ உற்றுநோக்கும்பொழுது அதில். **To obtain any other declaration – Three years – When the right to sue first accrues.” என்று சொல்லியிருந்தபொதிலும். காலவரையறைச்சட்டம் பிரிவு 22-ல். “Continuing breaches and torts.- In the case of a continuing breach of contract or in the case of a continuing tort, a fresh period of limitation begins to run at every moment of the time during which the breach or the tort, as the case may be, continues.” என்று சொல்லப்பட்டுள்ளது. இவ்வழக்கு பிரச்சனை கூரைவாரிச்சந்து என்பதால் வாதி வழக்குரைச்சந்தில் நுழைவதை பிரதிவாதி தடுக்கும் ஒவ்வொரு முறையும் வழக்குமூலம் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கும் என்பதால் காலவரையறைச்சட்டம் பிரிவு 22-ன்படி வாதியின் இவ்வழக்கானது காலாவதி தோசத்திற்கு ஆட்படவில்லை என்று இந்நீதிமன்றம் முடிவு செய்து அவ்வாறே இந்த எழுவினா வாதிக்கு ஆதரவாக தீர்வு காணப்படுகிறது.
11. எழுவினா 5.
வாதி விளம்புகை மற்றும் நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் பெற அருகரா என்பது குறித்து பார்க்கும்பொழுது இந்நீதிமன்றம் ஏற்கனவே எழுவினாக்கள் 1.4-க்கு வாதிக்கு ஆதரவாக தீர்வு கண்டிருந்தபோதிலும். எழுவினாக்கள் 2.3 வாதிக்கு எதிராக தீர்வு கண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் வாதி கோருவதுபோல் விளம்புகை மற்றும் நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் பெற அருகரல்ல என்று இந்நீதிமன்றம் முடிவு செய்து அவ்வாறே இந்த எழுவினா வாதிக்கு எதிராக தீர்வு காணப்படுகிறது.
12. எழுவினாக்கள் 6.7.
வழக்குரை கூரைவாரிச்சந்தில் வாதிக்கு புழக்க உரிமை இருக்கிறதா அதன் காரணபரிகார்த்தமாக வாதி விளம்புகை மற்றும் நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் பெற அருகரா என்பது குறித்து பார்க்கும்பொழுது வாதி தன் வழக்குரையில். வழக்குரை கூரைவாரிச்சந்திற்கு வாதியும் ஓர் அடி இடம் விட்டிருப்பதாக கூறியிருக்கிறார். புழக்க உரிமை என்பது அடுத்தவரின் நிலத்தின் வழியாக சென்று தன் நிலத்தை புழங்குவதற்கு உரிய உரிமையாகும். மேலும். வாதி தன் வழக்குரையில். வழக்குரை கூரைவாரிச்சந்து பிரதிவாதிக்கு மட்டும் பாத்தியப்பட்டது என்றும். அதை பிரதிவாதி அறிய எவ்விதமான இடையூறும் இல்லாமல் தொடர்ந்து 20 வருட காலங்களாக அனுபவித்து வருவதாக எங்கும் கூறவில்லை.மேலும். Indian Easement Act, Section 15-y. Acquisition by prescription.- Where the access and use of light or air to and for any building have been 15 peaceably enjoyed therewith, as an easement, without interruption, and for twenty years,” என்று சொல்லப்பட்டுள்ளது இவ்வழக்கிற்கு பொருந்தி வருவதால் வழக்குரை கூரைவாரிச்சந்தில் வாதிக்கு புழக்க உரிமை சட்டப்படி ஏற்படவில்லை என்றும். அதனால் வாதி விளம்புகை பரிகாரமோ. நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரமோ பெற அருகரல்ல என்றும் இந்நீதிமன்றம் முடிவு செய்து அவ்வாறே இந்த எழுவினாக்கள் வாதிக்கு எதிராக தீர்வு காணப்படுகிறது.
13. எழுவினா 8.
இந்நீதிமன்றம் ஏற்கனவே எழு வினாக்கள் 1 மற்றும் 4-ஐ வாதிக்கு ஆதரவாகவும். எழுவினாக்கள் 2.3.5.6.7-ஐ வாதிக்கு எதிராகவும் தீர்வு கண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் வேறு எந்த பரிகாரமும் வாதிக்கு கிடைக்கத்தக்கதல்ல என்று இந்நீதிமன்றம் முடிவு செய்து அவ்வாறே இந்த எழுவினாவிற்கு தீர்வு காணப்படுகிறது.
14. இறுதியாக. வாதி தாக்கல் செய்திருக்கும் இவ்வழக்கானது தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கப்படுகிறது. இவ்வழக்கின் நேர்நிலை. தன்மை மற்றும் தரப்பினர்களுக்கு இடையே உள்ள உறவுமுறை ஆகியவைகளை கருத்திற்கொண்டு செலவுத்தொகை இல்லை.
இத்தீர்ப்புரை என்னால் உதவியாளருக்கு சொல்லப்பட்டு. அவரால் நேரடியாக தட்டச்சு செய்யப்பட்டு பின்னர் என்னால் படித்துப் பார்த்து பிழைநீக்கம் செய்யப்பட்டு 2015-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 22-ம் நாளான இன்று இந்நீதிமன்றத்தின் முன் அவையறிய பகரப்பட்டது.

No comments:

Post a Comment