02/04/2017

5749 - தனிப்பட்ட முறையில் கு. வி. மு. ச பிரிவு 200ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை (Private Complaint), ஆவணங்களின் அடிப்படையில் சாட்சிகளை விசாரிக்காமல் நீதிமன்றம் தள்ளுபடி செய்வது தவறாகும், CRL RC No. 1468 / 2011, High Court. Madras, நன்றி ஐயா. Dhanesh Balamurugan

தனிப்பட்ட முறையில் கு. வி. மு. ச பிரிவு 200ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை (Private Complaint), ஆவணங்களின் அடிப்படையில் சாட்சிகளை விசாரிக்காமல் நீதிமன்றம் தள்ளுபடி செய்வது தவறாகும்

Mariyappan Vs Panneerselvam (1990-LW-CRL-14) என்ற வழக்கில் "குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 203ன்படி வழக்கில் சம்மன் அனுப்ப முகாந்திரம் உள்ளதா? என்பதை மட்டுமே குற்றவியல் நடுவர் பார்க்க வேண்டும். சாட்சியத்தின் தன்மைகளை ஆராயக்கூடாது. புகார்தாரரின் பிரமாண வாக்குமூலம், புகார் கொடுப்பதில் காலதாமதம், உள் நோக்கம் ஆகியவற்றை எதிரி நீதிமன்றத்தில் வழக்கில் ஆஜரான பிறகு தான் கருத்தில் கொள்ள வேண்டும். வழக்கில் கூறப்பட்டுள்ள சங்கதிகளை அப்படியே ஏற்றுக் கொண்டு வழக்கில் கூறியுள்ளபடி குற்றப் பிரிவுகள் இருக்கும் பட்சத்தில் எதிரிக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

ஒரு புகார் கு. வி. மு. ச பிரிவு 200ன் கீழ் தாக்கல் செய்யப்படும் போது புகார்தாரர் மற்றும் அவர் தரப்பில் சாட்சிகள் ஆகியோர்களை விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு தான் அந்த வழக்கில் முகாந்திரம் உள்ளதா? இல்லையா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது

No comments:

Post a comment