இஸ்லாம் மதத்தை சார்ந்த ஒருவர் தன் மனைவிக்கு நன்கொடையாக கொடுத்த வீட்டினை அவருடைய மனைவி விற்க முடியும்.
இஸ்லாம் மதத்தை சார்ந்த ஒருவர் தன்னுடைய மனைவிக்கு ஒரு பதிவு செய்யப்பட்ட கொடை ஆவணத்தின் மூலமாக சொத்தை வழங்க எந்த தடையும் இல்லை. ஆனால் அவ்வாறு கொடுக்கப்பட்ட கொடையை அந்த மனைவி பெற்றிருக்க வேண்டும் என்றும் கொடை ஆவணம் மட்டும் எழுதினால் போதாது சொத்தின் சுவாதீனம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவ்வாறு சொத்தின் சுவாதீனத்தை ஒப்படைக்கவில்லை என்றால் அதனை முகம்மதிய சட்டப் பிரிவுகள் 149 மற்றும் 152ன் படிஉண்மையான கொடையாக கருத முடியாது.
முகம்மதிய சட்டப்படி ஒரு சொத்தை கொடையாக கொடுக்கும் போது அதனை கொடையாக பெறுபவர் வசம் சொத்தின் சுவாதீனம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றிருந்தாலும் அச்சட்டத்தின் பிரிவு 152(3)ன் படி கொடை கொடுப்பவரும், கொடையை பெறுபவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் போது கொடை கொடுப்பவர் தன்னுடைய நோக்கத்தினை தெளிவாக குறிப்பிட்டிருந்தால் போதுமானது. அதேபோல் பிரிவு 153ன் படி சுவாதீன ஒப்படைப்பு என்பது கணவர், மனைவி ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் போது அவசியம் இல்லை என்றும், கொடை ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள வாசகங்களின் படி கணவர் உண்மையிலேயே மனைவிக்கு சொத்தை உரிமை மாற்றம் செய்திருந்தால் போதுமானது ஆகும். எனவே முகம்மதிய கணவரால் கொடுக்கப்பட்ட வீட்டை அவர் மனைவி தாராளமாக யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்ய முழு உரிமை உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
No comments:
Post a Comment