Sunday, April 02, 2017

5752 - ஒரு கடனுறுதிச் சீட்டை பூர்த்தி செய்யாமல், கையெழுத்து மட்டும் போட்டுக் கொடுத்துள்ளதை பிரதிவாதி ஒப்புக் கொண்டதால், அந்த கடனுறுதிச் சீட்டிலுள்ள தேதியில் திருத்தம் (Alteration) செய்து கொள்வதற்கு மாற்றுமுறை ஆவணச் சட்டப்படி கடன் கொடுத்தவருக்கு (வாதிக்கு) உரிமையில்லை, SA.No.267 of 2015, 14/11/2016, High Court, Madras, Thanks to Mr. Dhanesh Balamurugan

கடனுறுதி சீட்டு வழக்கு - ஒரு கடனுறுதிச் சீட்டை பூர்த்தி செய்யாமல், கையெழுத்து மட்டும் போட்டுக் கொடுத்துள்ளதை பிரதிவாதி ஒப்புக் கொண்டதால், அந்த கடனுறுதிச் சீட்டிலுள்ள தேதியில் திருத்தம் (Alteration) செய்து கொள்வதற்கு மாற்றுமுறை ஆவணச் சட்டப்படி கடன் கொடுத்தவருக்கு (வாதிக்கு) உரிமையில்லை. கடனுறுதிச் சீட்டில் கண்ட கையெழுத்தை கடன் பெற்றவர் ஒப்புக்கொண்டுள்ளதால், அந்த கடன் தொகையை பெற்றுக் கொண்டார் என்று சட்டப்படி அனுமானிக்க வேண்டும் என்று மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 20 ல் கூறப்பட்டுள்ளது என்றும் அதனால் கடனுறுதிச் சீட்டில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்ற ஒரு கேள்வியை கடன் பெற்றவர் எழுப்ப முடியாது என்பதை ஏற்க முடியாது. மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 20ன்படி, ஒரு நபரால் பூர்த்தி செய்யப்படாமல், கையொப்பமிட்டு அளிக்கப்பட்ட கடனுறுதிச் சீட்டை பூர்த்தி செய்து கொள்வதற்கு, கடனுறுதி சீட்டை பெற்றவருக்கு உரிமை உள்ளது என்பது உண்மைதான் என்றாலும் அந்த கடனுறுதிச் சீட்டை பூர்த்தி செய்ததற்கு பின்னர் அதிலுள்ள தேதி அல்லது வாசகங்கள் ஆகியவற்றை கடனுறுதிச் சீட்டை பெற்றவர் அவருடைய விருப்பம் போல் மாற்றிக் கொள்வதற்கு அல்லது திருத்திக் கொள்வதற்கு உரிமை உடையவர் என்று கருத முடியாது. அவ்வாறு ஒரு திருத்தம் செய்யப்பட்டு, அதனை கடனுறுதிச் சீட்டை எழுதி கொடுத்தவர் மறுக்கும்போது அந்த திருத்தம் மா. ஆ. ச பிரிவு 20ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பினை பெறுவதற்குரிய ஒன்றாக ஏற்றுக்கொள்ள இயலாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. SA. NO - 267/2015, DT - 14.11.2016, Annadurai Vs Rajendhiran (2016-6-CTC-752)

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wU3VKVzBqWTdENU0/view?usp=sharing

No comments:

Post a Comment